• Nov 23 2024

வருடங்களுக்கு பிறகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டு போட்டி!

Tamil nila / Jul 10th 2024, 8:17 pm
image

வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி 5 வருடங்களுக்கு பின்னர் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனை முன்பாக பான்ட் அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

தேசியக் கொடி, வலயக் கொடி, கோட்டக் கொடி, தெற்கு வலய பாடசாலைகளின் கொடிகள் ஏற்றப்பட்டு சத்தியப் பிரமாண நிகழ்வின் பின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதிதிகள் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி கல்விப் பணிப்பாளர்களினால் கௌரவிக்கப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் சாதித்த வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா தெற்கு வலயக கல்விப் பாணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், துணுக்காய் கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர்  எஸ்.ஜெய்கீசன், மன்னார் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் தபேந்திரலிங்கம் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பயிற்றிவிப்பாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

இதன் போது 60 மீற்றர், 100 மீற்றர், 200 மிற்றர், 400 மீற்றர் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் பல்வேறு வயதுப் பிரிவினருக்கும் நடைபெற்று இருந்தது.

இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் மைதானமானது அண்மையில் பாடசாலையின் பழைய மாணவர்களால் புணரமைப்பு செய்து விஸ்தரிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக இடம்பெறும் வலய நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.



வருடங்களுக்கு பிறகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டு போட்டி வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி 5 வருடங்களுக்கு பின்னர் சிறப்பான முறையில் இடம்பெற்றது.வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனை முன்பாக பான்ட் அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.தேசியக் கொடி, வலயக் கொடி, கோட்டக் கொடி, தெற்கு வலய பாடசாலைகளின் கொடிகள் ஏற்றப்பட்டு சத்தியப் பிரமாண நிகழ்வின் பின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதிதிகள் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி கல்விப் பணிப்பாளர்களினால் கௌரவிக்கப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் சாதித்த வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.வவுனியா தெற்கு வலயக கல்விப் பாணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், துணுக்காய் கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர்  எஸ்.ஜெய்கீசன், மன்னார் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் தபேந்திரலிங்கம் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பயிற்றிவிப்பாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.இதன் போது 60 மீற்றர், 100 மீற்றர், 200 மிற்றர், 400 மீற்றர் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் பல்வேறு வயதுப் பிரிவினருக்கும் நடைபெற்று இருந்தது.இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் மைதானமானது அண்மையில் பாடசாலையின் பழைய மாணவர்களால் புணரமைப்பு செய்து விஸ்தரிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக இடம்பெறும் வலய நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement