• May 19 2024

வவுனியா பல்கலைக்கழக மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: சிங்கள மயமாவதாக குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 13th 2023, 8:51 pm
image

Advertisement

வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை வவுனியா பல்கலைக் கழகத்தில் நேற்று(12) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதியில் வரவேற்பு பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. குறித்த பதாதையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஆங்கிலவ மொழியும் காணப்படுகின்றது. தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாவது பல்கலைக கழகமும், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் உள்ள வன்னிக்கான பல்கலைக்கழகமுமான வவுனியாப பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிவதற்கு முன்னரே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விசனம் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைக்கழக மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: சிங்கள மயமாவதாக குற்றச்சாட்டு.samugammedia வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை வவுனியா பல்கலைக் கழகத்தில் நேற்று(12) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதியில் வரவேற்பு பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. குறித்த பதாதையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஆங்கிலவ மொழியும் காணப்படுகின்றது. தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாவது பல்கலைக கழகமும், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் உள்ள வன்னிக்கான பல்கலைக்கழகமுமான வவுனியாப பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிவதற்கு முன்னரே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விசனம் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement