• May 03 2024

வெடுக்குநாறிமலை விவகாரம் - ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம்! நீதிமன்றம் அறிவிப்பு samugammedia

Chithra / Jun 29th 2023, 6:49 am
image

Advertisement

வவுனியா - வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தரப்பு ஆட்சேபனைகளை முன்வைக்க, உயர்நீதிமன்றம் நேற்று (28) தொடக்கம் ஆறு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.

அதேநேரம், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

வவுனியா – வெடுக்குநாறி மலையில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணை நடத்த தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவிடுமாறு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்கமுவே சங்கபோதி தேரர் மற்றும் பிரிகேடியர் அத்துல டி சில்வா உள்ளிட்டோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினர், இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.


வெடுக்குநாறிமலை விவகாரம் - ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் நீதிமன்றம் அறிவிப்பு samugammedia வவுனியா - வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தரப்பு ஆட்சேபனைகளை முன்வைக்க, உயர்நீதிமன்றம் நேற்று (28) தொடக்கம் ஆறு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.அதேநேரம், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.வவுனியா – வெடுக்குநாறி மலையில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணை நடத்த தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவிடுமாறு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.கல்கமுவே சங்கபோதி தேரர் மற்றும் பிரிகேடியர் அத்துல டி சில்வா உள்ளிட்டோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த மனு, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினர், இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement