• Nov 24 2024

இலங்கையில் மரக்கறி வகைகளின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Chithra / Jan 21st 2024, 3:37 pm
image

 

கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறி வகைகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ள இன்றைய தினத்திற்கான மரக்கறி விலைப் பட்டியல் தொடர்பான அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய கோவா ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 470 ரூபாவுக்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 340 ரூபாய் முதல் 360 ரூபாவிற்கும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 400 ரூபாய் முதல் 420 ரூபாவிற்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 300 ரூபாய் முதல் 320 ரூபாவிற்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது

அதேவேளை நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் கடந்த 17ஆம் திகதி விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் கரட் 1700 ரூபாய் முதல் 1800 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மரக்கறி வகைகளின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்.  கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறி வகைகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ள இன்றைய தினத்திற்கான மரக்கறி விலைப் பட்டியல் தொடர்பான அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.அதற்கமைய கோவா ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 470 ரூபாவுக்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 340 ரூபாய் முதல் 360 ரூபாவிற்கும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 400 ரூபாய் முதல் 420 ரூபாவிற்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 300 ரூபாய் முதல் 320 ரூபாவிற்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றதுஅதேவேளை நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் கடந்த 17ஆம் திகதி விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் கரட் 1700 ரூபாய் முதல் 1800 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement