• Nov 28 2024

வாகன இறக்குமதி தடை - புதிய அரசின் நிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Chithra / Sep 29th 2024, 8:10 am
image


கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலைமைகள், அந்த அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தேவையான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னரே முன்னைய அரசாங்கம் பரிந்துரைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 2025 பெப்ரவரி 1ஆம் திகதிக்குள், தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய நிர்வாகம் அறிவித்திருந்தது.

நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு தற்போதைய நிதியமைச்சகத்தினுடையது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வாகன இறக்குமதி தடை - புதிய அரசின் நிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலைமைகள், அந்த அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.தேவையான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னரே முன்னைய அரசாங்கம் பரிந்துரைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி 2025 பெப்ரவரி 1ஆம் திகதிக்குள், தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய நிர்வாகம் அறிவித்திருந்தது.நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு தற்போதைய நிதியமைச்சகத்தினுடையது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement