• Sep 29 2024

வாகன இறக்குதி; ஒரு தரப்பினருக்கு மாத்திரமே நிவாரணம்! சுற்றுலா அமைச்சு மீது குற்றச்சாட்டு!

Chithra / Jun 25th 2024, 12:04 pm
image

Advertisement

  

1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனூடாக அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள எந்த இலக்குகளையும் அடைய முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"2020 மார்ச் 20 முதல் இந்த வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு 4 முதல் 5 ஆண்டுகளாக எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

 முதலாவது விடயம் என்னவென்றால் சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம்.

இது உண்மையில் நிலம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது புத்தம் புதிய முகவர்களுக்கு மாத்திரமே, 1,000 வாகனங்கள், அதாவது பேருந்துகள் மற்றும் வேன்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக ஆயிரக்கணக்கான மற்ற இறக்குமதியாளர்கள் அனைவரும் வெட்டி விடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுக்காமல் இந்தச் சிலரின் நலனுக்காகச் சுற்றுலாத்துறை அமைச்சினால் மிகவும் நுணுக்கமான முறையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது  

புதிய முகவரிடமிருந்து வாகனத்தை ஓர்டர் செய்தால், வாகனம் வர 6 முதல் 8 மாதங்கள் ஆகும். அதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இன்று ஓர்டர் செய்தால் அடுத்த மாதத்திற்குள் வாகனத்தை டெலிவரி செய்து விடலாம். வரவிருக்கும் சுற்றுலாப் பருவத்திற்கு தயாராகதான் நாமும் காத்திருக்கிறோம். என தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குதி; ஒரு தரப்பினருக்கு மாத்திரமே நிவாரணம் சுற்றுலா அமைச்சு மீது குற்றச்சாட்டு   1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இதனூடாக அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள எந்த இலக்குகளையும் அடைய முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்."2020 மார்ச் 20 முதல் இந்த வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு 4 முதல் 5 ஆண்டுகளாக எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. முதலாவது விடயம் என்னவென்றால் சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம்.இது உண்மையில் நிலம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது புத்தம் புதிய முகவர்களுக்கு மாத்திரமே, 1,000 வாகனங்கள், அதாவது பேருந்துகள் மற்றும் வேன்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனூடாக ஆயிரக்கணக்கான மற்ற இறக்குமதியாளர்கள் அனைவரும் வெட்டி விடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுக்காமல் இந்தச் சிலரின் நலனுக்காகச் சுற்றுலாத்துறை அமைச்சினால் மிகவும் நுணுக்கமான முறையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது  புதிய முகவரிடமிருந்து வாகனத்தை ஓர்டர் செய்தால், வாகனம் வர 6 முதல் 8 மாதங்கள் ஆகும். அதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இன்று ஓர்டர் செய்தால் அடுத்த மாதத்திற்குள் வாகனத்தை டெலிவரி செய்து விடலாம். வரவிருக்கும் சுற்றுலாப் பருவத்திற்கு தயாராகதான் நாமும் காத்திருக்கிறோம். என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement