சீனாவில் வுசுவாங்க் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அடுக்கடுக்காக தரித்து நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் 8 நாட்கள் விடுமுறையை முடித்து விட்டு மில்லியன் கணக்கான மக்கள் வீடு திரும்பிய போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விடுமுறையால் ஏற்பட்ட பயணங்களின் போதே சீனாவில் கடும் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் பிற வாகனங்கள் 36 பாதைகள் கொண்ட நெடுங்சாலையை அடுக்கடுக்காக நிரப்பிய வண்ணம் எறும்புகள் போன்று ஊர்ந்து சென்றன.
வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அடுக்கடுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் காணொளிகளாகப் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
அடுக்கடுக்காக நின்ற வாகனங்கள்; சீன நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் சீனாவில் வுசுவாங்க் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அடுக்கடுக்காக தரித்து நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவில் 8 நாட்கள் விடுமுறையை முடித்து விட்டு மில்லியன் கணக்கான மக்கள் வீடு திரும்பிய போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.சீனாவின் கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.இந்த விடுமுறையால் ஏற்பட்ட பயணங்களின் போதே சீனாவில் கடும் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் பிற வாகனங்கள் 36 பாதைகள் கொண்ட நெடுங்சாலையை அடுக்கடுக்காக நிரப்பிய வண்ணம் எறும்புகள் போன்று ஊர்ந்து சென்றன. வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அடுக்கடுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் காணொளிகளாகப் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.