• Nov 29 2024

யுக்திய நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Chithra / Feb 17th 2024, 4:31 pm
image

 

யுக்திய நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவை கடுவெல நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான உரிய வாகனங்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அவகாசம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தே இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்களைக் கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

யுக்திய நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு  யுக்திய நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த உத்தரவை கடுவெல நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான உரிய வாகனங்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அவகாசம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தே இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வாகனங்களைக் கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement