• May 19 2024

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து கிழக்கு பல்கலை மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்!SamugamMedia

Sharmi / Mar 2nd 2023, 10:30 pm
image

Advertisement

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று மாலை  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது மற்றும் நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

பல்கலைக்கழக செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளமை,நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றங்கள்,வரிவிதிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் கஸ்டங்கள் உட்பட பல்வேறு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து கிழக்கு பல்கலை மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்SamugamMedia கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று மாலை  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது மற்றும் நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.பல்கலைக்கழக செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளமை,நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றங்கள்,வரிவிதிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் கஸ்டங்கள் உட்பட பல்வேறு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement