• Jun 02 2024

குடமுருட்டி குளத்தினை இரண்டாக பிரிக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 4:01 pm
image

Advertisement

குடமுருட்டி குளத்தினை இரண்டாக பிரிக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் குடமுருட்டி குளத்தின் அணைக்கட்டில் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை விவசாயிகள் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குளமானது 2016ம் ஆண்டு பாரிய நீர்பாசன குளமாக மாற்றப்பட்டு விவசாயிகளிற்கு சிறுபோக செய்கைக்கு கையளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 110 விவசாயிகளிற்கு சிறுபுாக செய்கைக்காக வழங்கப்பட்டது. குடிமுருட்டி வாய்க்கால் ஊடாக செல்லும் நீரை குறித்த குளத்தில் மறித்து அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்த அபிவிருத்தியின் ஊடாக மேலும் 600 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த 2013ம் ஆண்டு அடிப்படையில் நீர் டுதலாக இருப்பதாலும், காரியம்பிட்டி பகுதியில் நிலங்கள் கூடுதலாக இருப்பதாலும் அங்குள்ள 80 பயனாளிகளை எம்முடன் தற்காலிக இணைப்பாக இணைத்து அவர்களுடன் 334 பயனாளிகளாக உள்வாங்கப்பட்டனர்.

இ்ந்நிலையில், குறித்த குளத்தில் காணப்படும் 3 துருசுகளில் வலது கரை துருசினை மையப்படுத்தி தம்மை குடமுருட்டி குளத்தின் வலதுகலை விவசாய சங்கமாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

குறித்த நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். குறித்த மூன்று துருசுகளில் ஏனைய இரண்டும் உயர்ந்த பகுதியில் காணப்படுகின்றது. வலது கரை துருசானது தாழ் நில பகுதியில் காணப்படுவதனால் கால காலமாக விவசாயித்தில் ஈடுபட்டுவரும் எமக்கு நீர் கிடைக்காத நிலை காணப்படும்.

குறித்த வலது கரை பகுதியை தனியான சங்கமாக மாற்றி, அதிலிருந்து நீரை பெற எத்தனிப்பவர்கள் பல ஏக்கர் காணிக்கு உருத்துடையவர்கள் என்பதுடன், அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். விவசாய செய்கையின் போது இப்பகுதிக்கு வருவார்கள். 

ஆனால், காலம் காலமாக விவசாயம் செய்துவரும் எமக்கு தலா 1.5 ஏக்கர் செய்கை நிலம் மாத்திரமே உள்ளது. அதனை நம்பியே எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது. அவ்வாறு குறித்த குளத்தினை இரண்டு பங்குகளாக பிரிப்பதனால் எமக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். 

குறித்த தரப்பினர், மானாவாரி நிலத்தினை நம்பியே செய்கை மேற்கொண்டு வந்தனர். அவர்களிற்கு மிக இருகில் இரண்டு குளங்கள் உள்ளது. அந்த குளத்தினை மையப்படுத்தி கமக்கார அமைப்பாக பதிவு செய்வதே பொருத்தமானது.

அதை விடுத்து, எமது வாழ்வாதார குளத்தினை இரண்டாக பிரித்து அதனை துண்டாட நினைப்பது எமது வாழ்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம்.

ஆனாலும் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். எமது இந்த பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு பெற்று தர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.




குடமுருட்டி குளத்தினை இரண்டாக பிரிக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.samugammedia குடமுருட்டி குளத்தினை இரண்டாக பிரிக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் குடமுருட்டி குளத்தின் அணைக்கட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை விவசாயிகள் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த குளமானது 2016ம் ஆண்டு பாரிய நீர்பாசன குளமாக மாற்றப்பட்டு விவசாயிகளிற்கு சிறுபோக செய்கைக்கு கையளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 110 விவசாயிகளிற்கு சிறுபுாக செய்கைக்காக வழங்கப்பட்டது. குடிமுருட்டி வாய்க்கால் ஊடாக செல்லும் நீரை குறித்த குளத்தில் மறித்து அபிவிருத்தி செய்யப்பட்டது.இந்த அபிவிருத்தியின் ஊடாக மேலும் 600 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த 2013ம் ஆண்டு அடிப்படையில் நீர் டுதலாக இருப்பதாலும், காரியம்பிட்டி பகுதியில் நிலங்கள் கூடுதலாக இருப்பதாலும் அங்குள்ள 80 பயனாளிகளை எம்முடன் தற்காலிக இணைப்பாக இணைத்து அவர்களுடன் 334 பயனாளிகளாக உள்வாங்கப்பட்டனர்.இ்ந்நிலையில், குறித்த குளத்தில் காணப்படும் 3 துருசுகளில் வலது கரை துருசினை மையப்படுத்தி தம்மை குடமுருட்டி குளத்தின் வலதுகலை விவசாய சங்கமாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். குறித்த மூன்று துருசுகளில் ஏனைய இரண்டும் உயர்ந்த பகுதியில் காணப்படுகின்றது. வலது கரை துருசானது தாழ் நில பகுதியில் காணப்படுவதனால் கால காலமாக விவசாயித்தில் ஈடுபட்டுவரும் எமக்கு நீர் கிடைக்காத நிலை காணப்படும்.குறித்த வலது கரை பகுதியை தனியான சங்கமாக மாற்றி, அதிலிருந்து நீரை பெற எத்தனிப்பவர்கள் பல ஏக்கர் காணிக்கு உருத்துடையவர்கள் என்பதுடன், அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். விவசாய செய்கையின் போது இப்பகுதிக்கு வருவார்கள். ஆனால், காலம் காலமாக விவசாயம் செய்துவரும் எமக்கு தலா 1.5 ஏக்கர் செய்கை நிலம் மாத்திரமே உள்ளது. அதனை நம்பியே எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது. அவ்வாறு குறித்த குளத்தினை இரண்டு பங்குகளாக பிரிப்பதனால் எமக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். குறித்த தரப்பினர், மானாவாரி நிலத்தினை நம்பியே செய்கை மேற்கொண்டு வந்தனர். அவர்களிற்கு மிக இருகில் இரண்டு குளங்கள் உள்ளது. அந்த குளத்தினை மையப்படுத்தி கமக்கார அமைப்பாக பதிவு செய்வதே பொருத்தமானது.அதை விடுத்து, எமது வாழ்வாதார குளத்தினை இரண்டாக பிரித்து அதனை துண்டாட நினைப்பது எமது வாழ்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம்.ஆனாலும் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். எமது இந்த பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு பெற்று தர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement