• May 04 2024

தனிநாடு கோரும் தகுதியை தமிழினம் வளர்க்க வேண்டும் என்கின்றார் விக்னேஸ்வரன் எம்.பி..!samugammedia

Sharmi / Sep 7th 2023, 9:45 am
image

Advertisement

ஐ. நா. வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ  நேற்றைய தினம் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனின் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதன்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர்,

அரசியல்வாதிகளுக்கு திணைக்களங்களில் இருப்பவர்கள் தங்கள் கடமையை விட்டு வெளிச் சென்று உதவுகின்றனர்.

இது எங்களுக்கு மிகவும் கெடுதலான வருங்காலத்தைத் தரும் என்று நான் நம்புகிறேன். அரசியல்வாதிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான அதிகாரிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எங்களுடைய நிர்வாகம் சீர்குலைந்தால் எங்கள் வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகங்களும் சீர்குலையும். இவ்வாறு நிர்வாகம் சீர்குலைந்த ஓர் இனம்தான் சமஷ்டி வேண்டும். தனி
நாடு வேண்டும் என்று கோருகின்றது.

இதற்கு ஏற்றவாறான தகைமைகள் எங்களுக்கு இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். எங்களுடைய நாளாந்த கடமைகளை சரியாக செய்ய முடியாதவர்கள் தனிநாடு பெற்றோ அல்லது
சமஷ்டி பெற்றோ நடத்த முடியாது.

அதற்கேற்றவாறு, இப்போதே நாங்கள் எம்மை மாற்றி  தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி - நிர்வாக சீர்திருத்தம் நடைபெற வேண்டும் என்றார்.

தனிநாடு கோரும் தகுதியை தமிழினம் வளர்க்க வேண்டும் என்கின்றார் விக்னேஸ்வரன் எம்.பி.samugammedia ஐ. நா. வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ  நேற்றைய தினம் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனின் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர்,அரசியல்வாதிகளுக்கு திணைக்களங்களில் இருப்பவர்கள் தங்கள் கடமையை விட்டு வெளிச் சென்று உதவுகின்றனர்.இது எங்களுக்கு மிகவும் கெடுதலான வருங்காலத்தைத் தரும் என்று நான் நம்புகிறேன். அரசியல்வாதிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறான அதிகாரிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.எங்களுடைய நிர்வாகம் சீர்குலைந்தால் எங்கள் வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகங்களும் சீர்குலையும். இவ்வாறு நிர்வாகம் சீர்குலைந்த ஓர் இனம்தான் சமஷ்டி வேண்டும். தனிநாடு வேண்டும் என்று கோருகின்றது.இதற்கு ஏற்றவாறான தகைமைகள் எங்களுக்கு இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். எங்களுடைய நாளாந்த கடமைகளை சரியாக செய்ய முடியாதவர்கள் தனிநாடு பெற்றோ அல்லதுசமஷ்டி பெற்றோ நடத்த முடியாது.அதற்கேற்றவாறு, இப்போதே நாங்கள் எம்மை மாற்றி  தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி - நிர்வாக சீர்திருத்தம் நடைபெற வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement