• Nov 25 2024

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு எச்சரிக்கை..! பொவிஸாரின் விசேட அறிவிப்பு

Chithra / Jan 28th 2024, 7:57 am
image

 

வீடுகள் மற்றும் கட்டடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தவிர, வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிலர் குடும்பங்களுடன் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் வாடகைக்கு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு எச்சரிக்கை. பொவிஸாரின் விசேட அறிவிப்பு  வீடுகள் மற்றும் கட்டடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளது.வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். இது தவிர, வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் குடும்பங்களுடன் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் வாடகைக்கு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement