• Nov 23 2024

அநுர அரசின் கீழ் பணம் அச்சிடப்பட்டதா? புதிய கடன் தொடர்பிலும் விளக்கமளித்த அமைச்சர் விஜித

Chithra / Oct 29th 2024, 11:44 am
image

 

அரசாங்கம் புதிதாக கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், 

எந்தவொரு நிறுவனத்திடமும் வெளிநாட்டுக் கடன் பெறப்படவில்லை.

பொதுவாக, மத்திய வங்கி கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை உள்ளது.  அந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒன்று. 

மேலும்,  புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை. பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் எனும் ரீதியில் நாணயத்தாள்களில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

ரூ.1 பில்லியன் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டன என்ற செய்தி பொய்யானது என  அவர் கூறினார்.


மேலும்,  இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்  அமைச்சர்   தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த புலனாய்வு அமைப்புகள் நாட்டில் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும், அறுகம்பே பகுதிக்கு விஜயம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், அவ்வாறு இல்லாமல் பயணத்தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

அநுர அரசின் கீழ் பணம் அச்சிடப்பட்டதா புதிய கடன் தொடர்பிலும் விளக்கமளித்த அமைச்சர் விஜித  அரசாங்கம் புதிதாக கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு நிறுவனத்திடமும் வெளிநாட்டுக் கடன் பெறப்படவில்லை.பொதுவாக, மத்திய வங்கி கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை உள்ளது.  அந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒன்று. மேலும்,  புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை. பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் எனும் ரீதியில் நாணயத்தாள்களில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.ரூ.1 பில்லியன் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டன என்ற செய்தி பொய்யானது என  அவர் கூறினார்.மேலும்,  இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்  அமைச்சர்   தெரிவித்துள்ளார்.சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.எவ்வாறாயினும், இந்த புலனாய்வு அமைப்புகள் நாட்டில் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும், அறுகம்பே பகுதிக்கு விஜயம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், அவ்வாறு இல்லாமல் பயணத்தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement