• May 19 2024

மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத படகு - இந்திய அரசின் அபிவிருத்திக்கு பொருட்களை கொண்டுவருவதற்கான வெள்ளோட்டமா? samugammedia

Chithra / Jul 10th 2023, 7:06 pm
image

Advertisement

மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத படகு எங்கிருந்து வந்ததுது. இது சாதாரண விடயமில்லை. இந்திய அரசின் காற்றாலை மின்சாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திக்காக பொருட்களை கொண்டுவருவதற்காக வெள்ளோட்டமாக இப் படகு அனுப்பப்பட்டதா என சந்தேகிக்கின்றோம் என வடமாகாண  கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் மொகமட் ஆலம் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்றைய தினம்  யாழ்ப்பாணததிலுள்ள தனியார் விடுதியொன்றில் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின்  பொதுச்சபைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போதய காலத்தில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற நிலையிலும் ஊடகங்களை எமது பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்து தீர்வைத் தரக்கூடிய 

சாதனங்களாக உள்ளன. தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் பேணப்பட வேண்டுமென அரசிற்கு அழுத்தத்தை முன்வைக்கின்றோம்.

அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரின் இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடந்து வரும் செயற்பாடு தற்செயலான செயற்பாடெனவும் அவர்களைக் காப்பாற்றி தாய்நாட்டிற்கு தொடர்ந்தும் அனுப்பி வைக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளோம் என்ற கருத்து இன்று காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

இலங்கைக்கென ஆட்புலம் மற்றும் இறைமை இருக்கின்ற நிலையில் கடந்து வருதல் சட்டவிரோதமானது. வடபகுதி  மீனவர் பிரச்சினை பற்றி அறிந்திருந்த ஆளுநர் இவ்வாறு தெரிவித்ததை எதிர்க்கின்றோம். இவ்வாறான விடயங்களை அரசியல்வாதிகளுக்குட்பட ஏனையவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை மதித்துச் செயற்பட வேண்டும்.

இலங்கையிலிருக்கின்ற மீன்பிடிச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு வெளிநாட்டு படகுகள் வருவதற்கான புதிய சட்டப்பிரிவுகள் திருத்தப்படுமென கடற்தொழில் அமைச்சர் கூறியிருந்தார். இது அமைச்சரவையில் இந்த வருட இறுதிக்குள் சட்டமூலமாக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே உள்ள சட்டங்கள்  மீனவர்களுக்கு சாதகமாகவுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தலிலே பிரச்சினை காணப்படுகின்றது. மீனவர் பிரச்சினையை தீரப்பதற்கு சட்டங்களை கொண்டுவரும் போது எங்களுடன்  கலந்துரையாட  கடற்தொழிலமைச்சர் எம்மை  அழைத்தால் கலந்தாலோசிக்கத் தயாராக உள்ளோம்.

தென்னிலங்கை மீனவர்கள் அரபிக் கடலில் தொழில் செய்வதற்கான வாய்ப்பை இந்தியாவுடன் பேசி பெற்றுக்கொடுக்கலாம் என அக்கறை காட்டும் அமைச்சரின் செயல் சந்தேகத்திற்குரியது.

இந்திய மீனவர் வருகையை நிறுத்த முன்னிற்கும் அமைச்சர் இந்தியாவிற்குள் சென்று  அரபிக் கடலுக்குள் செல்ல அனுமதித்ததிலிருந்து சந்தேகம் எழுகின்றது.

கடந்த காலங்களில் இந்திய கடற்கரை பிரதேசம் மீன்பிடிக்கு மாத்திரமல்ல. ஏனைய தேவைகளுக்கும் குத்தகைக்கு வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் கூறியதில் சந்தேகம் நிலவுகிறது.

ஜனாதிபதி இந்தியா செல்ல முன்னர் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற  உறுப்பினர்களூடாக  மீன்பிடிச் சட்டங்கள்  தொடர்பாகவும் வடபகுதி மீனவர்கள் தொடர்பான கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத படகு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுகின்றது. இது சாதாரண விடயமில்லை.

 இந்திய அரசின் காற்றாலை மின்சாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திக்காக பொருட்களை கொண்டுவருவதற்காக வெள்ளோட்டமாக இப் படகு அனுப்பப்பட்டதா என சந்தேகிக்கின்றோம்.

இங்கு வந்த படகு அதானியின் துறைமுகமான தூத்துக்குடியில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது கடற்தொழில் அருகி வரும் நிலையில் கடலட்டை பண்ணை போன்ற செயற்பாடுகளுக்கு கடல் பகிர்ந்தளிக்கப்படுதலானது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் இவை முறையாக உரிய தரப்பிற்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.

இலங்கை வெளிநாட்டு நாடுகளுக்கு தாயகமாக மாறி வரும் நிலையை சீனாவும் நிதியை பயன்படுத்தி இங்குள்ளவர்களைப் பயன்படுத்தி இது சம்பந்தமான தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். 

மக்களின் வாக்குகளை பெறும் பிரதிநிதிகள் கூட மக்களுக்கு அநீதி ஏற்படும் போது தட்டிக் கேட்பதற்கும், தடுப்பதற்கும் தயங்கி வருகின்றனர். 

சீனா மட்டுமல்ல முன்னரைப் போல் அரேபியர்கள் , போத்துக்கீசர் மற்றும் ஆங்கிலேயர் போன்றோம் வரலாம் என்பதில் ஐயமில்லை. என்றார்.

இதேவேளை வடமாகாண இணையத்தின் தலைவர்  பாலசுரேஸ் சமகால மீனவர் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட கடற்தொழில் சார் தொழில்களை முப்படையினரும் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும். 

இதேவேளை எமது கடற்தொழில் சார் மக்களும் சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடாது எதிர்கால சந்ததியினரின் உணவுத் தேவைக்கேற்றாற்போல் கடலை உபயோகிக்க வேண்டும்.

கடற்தொழில் நடவடிக்கை சார் எந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாயினும் சரி கடன்களைப் பெறுவதாயினும் சரி அரசாங்கம் கடற்தொழிலாளர்களின் அனுமதியைப் பெற்ற பின்னே செயற்பட வேண்டும் என்றார்

மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத படகு - இந்திய அரசின் அபிவிருத்திக்கு பொருட்களை கொண்டுவருவதற்கான வெள்ளோட்டமா samugammedia மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத படகு எங்கிருந்து வந்ததுது. இது சாதாரண விடயமில்லை. இந்திய அரசின் காற்றாலை மின்சாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திக்காக பொருட்களை கொண்டுவருவதற்காக வெள்ளோட்டமாக இப் படகு அனுப்பப்பட்டதா என சந்தேகிக்கின்றோம் என வடமாகாண  கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் மொகமட் ஆலம் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,இன்றைய தினம்  யாழ்ப்பாணததிலுள்ள தனியார் விடுதியொன்றில் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின்  பொதுச்சபைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.தற்போதய காலத்தில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற நிலையிலும் ஊடகங்களை எமது பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்து தீர்வைத் தரக்கூடிய சாதனங்களாக உள்ளன. தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் பேணப்பட வேண்டுமென அரசிற்கு அழுத்தத்தை முன்வைக்கின்றோம்.அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரின் இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடந்து வரும் செயற்பாடு தற்செயலான செயற்பாடெனவும் அவர்களைக் காப்பாற்றி தாய்நாட்டிற்கு தொடர்ந்தும் அனுப்பி வைக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளோம் என்ற கருத்து இன்று காரசாரமாக விவாதிக்கப்பட்டது.இலங்கைக்கென ஆட்புலம் மற்றும் இறைமை இருக்கின்ற நிலையில் கடந்து வருதல் சட்டவிரோதமானது. வடபகுதி  மீனவர் பிரச்சினை பற்றி அறிந்திருந்த ஆளுநர் இவ்வாறு தெரிவித்ததை எதிர்க்கின்றோம். இவ்வாறான விடயங்களை அரசியல்வாதிகளுக்குட்பட ஏனையவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை மதித்துச் செயற்பட வேண்டும்.இலங்கையிலிருக்கின்ற மீன்பிடிச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு வெளிநாட்டு படகுகள் வருவதற்கான புதிய சட்டப்பிரிவுகள் திருத்தப்படுமென கடற்தொழில் அமைச்சர் கூறியிருந்தார். இது அமைச்சரவையில் இந்த வருட இறுதிக்குள் சட்டமூலமாக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.ஏற்கனவே உள்ள சட்டங்கள்  மீனவர்களுக்கு சாதகமாகவுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தலிலே பிரச்சினை காணப்படுகின்றது. மீனவர் பிரச்சினையை தீரப்பதற்கு சட்டங்களை கொண்டுவரும் போது எங்களுடன்  கலந்துரையாட  கடற்தொழிலமைச்சர் எம்மை  அழைத்தால் கலந்தாலோசிக்கத் தயாராக உள்ளோம்.தென்னிலங்கை மீனவர்கள் அரபிக் கடலில் தொழில் செய்வதற்கான வாய்ப்பை இந்தியாவுடன் பேசி பெற்றுக்கொடுக்கலாம் என அக்கறை காட்டும் அமைச்சரின் செயல் சந்தேகத்திற்குரியது.இந்திய மீனவர் வருகையை நிறுத்த முன்னிற்கும் அமைச்சர் இந்தியாவிற்குள் சென்று  அரபிக் கடலுக்குள் செல்ல அனுமதித்ததிலிருந்து சந்தேகம் எழுகின்றது.கடந்த காலங்களில் இந்திய கடற்கரை பிரதேசம் மீன்பிடிக்கு மாத்திரமல்ல. ஏனைய தேவைகளுக்கும் குத்தகைக்கு வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் கூறியதில் சந்தேகம் நிலவுகிறது.ஜனாதிபதி இந்தியா செல்ல முன்னர் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற  உறுப்பினர்களூடாக  மீன்பிடிச் சட்டங்கள்  தொடர்பாகவும் வடபகுதி மீனவர்கள் தொடர்பான கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத படகு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுகின்றது. இது சாதாரண விடயமில்லை. இந்திய அரசின் காற்றாலை மின்சாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திக்காக பொருட்களை கொண்டுவருவதற்காக வெள்ளோட்டமாக இப் படகு அனுப்பப்பட்டதா என சந்தேகிக்கின்றோம்.இங்கு வந்த படகு அதானியின் துறைமுகமான தூத்துக்குடியில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.தற்போது கடற்தொழில் அருகி வரும் நிலையில் கடலட்டை பண்ணை போன்ற செயற்பாடுகளுக்கு கடல் பகிர்ந்தளிக்கப்படுதலானது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் இவை முறையாக உரிய தரப்பிற்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.இலங்கை வெளிநாட்டு நாடுகளுக்கு தாயகமாக மாறி வரும் நிலையை சீனாவும் நிதியை பயன்படுத்தி இங்குள்ளவர்களைப் பயன்படுத்தி இது சம்பந்தமான தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வாக்குகளை பெறும் பிரதிநிதிகள் கூட மக்களுக்கு அநீதி ஏற்படும் போது தட்டிக் கேட்பதற்கும், தடுப்பதற்கும் தயங்கி வருகின்றனர். சீனா மட்டுமல்ல முன்னரைப் போல் அரேபியர்கள் , போத்துக்கீசர் மற்றும் ஆங்கிலேயர் போன்றோம் வரலாம் என்பதில் ஐயமில்லை. என்றார்.இதேவேளை வடமாகாண இணையத்தின் தலைவர்  பாலசுரேஸ் சமகால மீனவர் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட கடற்தொழில் சார் தொழில்களை முப்படையினரும் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும். இதேவேளை எமது கடற்தொழில் சார் மக்களும் சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடாது எதிர்கால சந்ததியினரின் உணவுத் தேவைக்கேற்றாற்போல் கடலை உபயோகிக்க வேண்டும்.கடற்தொழில் நடவடிக்கை சார் எந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாயினும் சரி கடன்களைப் பெறுவதாயினும் சரி அரசாங்கம் கடற்தொழிலாளர்களின் அனுமதியைப் பெற்ற பின்னே செயற்பட வேண்டும் என்றார்

Advertisement

Advertisement

Advertisement