• May 08 2024

பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பிரதமர் பாராட்டு! samugammedia

Chithra / Jul 10th 2023, 7:13 pm
image

Advertisement

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த பேருந்து பள்ளத்தில் விழுந்து இடம்பெறவிருந்த பாரிய விபத்தைத் தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை இராணுவத்தின் கோப்ரல் பி.ஆர்.கே.எல் கருணாரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (10) சந்தித்ததுடன், கோப்ரல் கருணாரத்னவின் வீரச் செயலை பிரதமர் பாராட்டினார்.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இந்த பேருந்து உடுதும்பர பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் சாரதி இருக்கையில் இருந்து சாரதி தூக்கி வீசப்பட்டு சுமார் ஐம்பது மீற்றர் தூரம் சாரதியின்றி பேருந்து பயணித்துள்ளது.

அப்போது பேருந்தில் பயணித்த இராணுவ கோப்ரல் உடனடியாக செயற்பட்டு சாரதி இன்றி பெரும் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பேருந்தை பெரும் பிரயத்தனப்பட்டு தடுத்து நிறுத்தி பாரிய விபத்தை தடுத்துள்ளார்.

பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பிரதமர் பாராட்டு samugammedia கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த பேருந்து பள்ளத்தில் விழுந்து இடம்பெறவிருந்த பாரிய விபத்தைத் தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை இராணுவத்தின் கோப்ரல் பி.ஆர்.கே.எல் கருணாரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (10) சந்தித்ததுடன், கோப்ரல் கருணாரத்னவின் வீரச் செயலை பிரதமர் பாராட்டினார்.கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இந்த பேருந்து உடுதும்பர பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் சாரதி இருக்கையில் இருந்து சாரதி தூக்கி வீசப்பட்டு சுமார் ஐம்பது மீற்றர் தூரம் சாரதியின்றி பேருந்து பயணித்துள்ளது.அப்போது பேருந்தில் பயணித்த இராணுவ கோப்ரல் உடனடியாக செயற்பட்டு சாரதி இன்றி பெரும் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பேருந்தை பெரும் பிரயத்தனப்பட்டு தடுத்து நிறுத்தி பாரிய விபத்தை தடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement