• Apr 27 2025

யாழ் கல்லுண்டாயில் எரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள்:மக்கள் அசௌகரியம்..!

Sharmi / Apr 26th 2025, 10:51 pm
image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லுண்டாயில்  பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகிறது. 

அந்த பகுதியிலேயே மாநகர சபையினர் கழிவுகளை கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் எரியூட்டப்பட்டது.

இவ்வாறு இன்றையதினமும் எரியூட்டியதால் புகையும், துர்நாற்றமும் வீதியில் பயணிக்கும் பயணிகளை பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தியது. 

எனவே மாநகர சபையின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


யாழ் கல்லுண்டாயில் எரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள்:மக்கள் அசௌகரியம். யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லுண்டாயில்  பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகிறது. அந்த பகுதியிலேயே மாநகர சபையினர் கழிவுகளை கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் எரியூட்டப்பட்டது.இவ்வாறு இன்றையதினமும் எரியூட்டியதால் புகையும், துர்நாற்றமும் வீதியில் பயணிக்கும் பயணிகளை பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தியது. எனவே மாநகர சபையின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement