• May 17 2024

வாக்காளர் அட்டைகளை அச்சிட நாம் தயார்- அரச அச்சக அதிகாரி தெரிவிப்பு!!

Sharmi / Feb 1st 2023, 2:40 pm
image

Advertisement

பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.

அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர், இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் தேவையான விளம்பரங்களை அச்சிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

339 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஊடக அதிகாரி, தற்போது வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் அரச அச்சகத்திற்கு கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துப் பட்டியல்களும் கிடைத்தவுடன் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் தொடர்பான அச்சுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் செலுத்தும் அளவுக்கு அச்சகத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகளை அச்சிட நாம் தயார்- அரச அச்சக அதிகாரி தெரிவிப்பு பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர், இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் தேவையான விளம்பரங்களை அச்சிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.339 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஊடக அதிகாரி, தற்போது வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் அரச அச்சகத்திற்கு கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துப் பட்டியல்களும் கிடைத்தவுடன் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், தேர்தல் தொடர்பான அச்சுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் செலுத்தும் அளவுக்கு அச்சகத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement