• Sep 22 2024

யாழில் உயிரை பணயம் வைத்தே வேலை செய்கிறோம்..! உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு samugammedia

Chithra / Oct 26th 2023, 1:44 pm
image

Advertisement

 


பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது. நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார். 

சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் முதலில் நாடுவது பொலிஸ் நிலையத்தினை தான். மக்களுக்கு நிறைய பிரச்சினை உள்ளது. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் பொலிஸ் கடமையினை செய்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே பொலிசார் மந்தகதியில் செயல்படுகிறார்கள் என கோரினார். 

அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்   தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல. நாம் ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம்.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.

நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள். 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

ஆகவே பொலிசார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரினார்.


யாழில் உயிரை பணயம் வைத்தே வேலை செய்கிறோம். உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு samugammedia  பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது. நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார். சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் முதலில் நாடுவது பொலிஸ் நிலையத்தினை தான். மக்களுக்கு நிறைய பிரச்சினை உள்ளது. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் பொலிஸ் கடமையினை செய்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.இன்றைய தினம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே பொலிசார் மந்தகதியில் செயல்படுகிறார்கள் என கோரினார். அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் பாராளுமன்ற உறுப்பினர்   தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல. நாம் ஆளணி பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம்.எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள். 75 வீதமான குற்றங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம்.ஆகவே பொலிசார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரினார்.

Advertisement

Advertisement

Advertisement