• May 18 2024

கேகாலை பெருந்தோட்ட நிறுவனம் உரிய கொடுப்பனவை வழங்க வேண்டும் - தொழில் ஆணையாளர் உறுதி! samugammedia

Chithra / Oct 26th 2023, 1:34 pm
image

Advertisement

 

 கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற நான்கு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில், தொழில் திணைக்களத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, குறித்த பிரச்சினையை மத்தியஸ்த சபையின் ஊடாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலாளர்களுக்கு, நிறுவனத்தினால் பணி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய வேதனத்தை வழங்கவும் இணக்கப்பாடு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல, லகிலேண்ட், கம்பஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களின் லாப கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை மத்தியஸ்தர் சபையின் ஊடாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

மேற்குறிப்பிட்ட தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றும் வேலை வழங்காமல் பெருந்தொட்ட நிறுவனத்தினால் வேலை நிறுத்தப்பட்டிருந்த 21 நாட்கள் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேதனம் ஆயிரம் ரூபாயை கணக்கிட்டு 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை தொழில் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய தோட்டங்களுக்கு விஜயம் செய்து உண்மை தன்மையை ஆராய்ந்து உடனடியாக கொடுப்பனவை வழங்குவதற்கு சிபாரிசு செய்வதாக தொழில் ஆணையாளர் உறுதி அளித்தார்

மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இணங்க பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் வேலை செய்தால் கட்டாயமாக ஒரு நாள் வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

வர்த்தமானியில் ஒரு தொழிலாளியால் பறிக்கப்படும் தேயிலையின் நிறை தொடர்பில் எதுவித அறிக்கையும் இல்லை என தொழில் ஆணையாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க ரீதியில் நமக்கும் கிடைக்கப்பெற்ற பாரியதொரு வெற்றியாக நான் இதனை காண்கின்றேன் என என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கருத்துரைத்தார்.

இதேவேளை, ஆயிரம் ரூபாய் வேதனத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய தேயிலையின் அளவு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில், இன்றைய கூட்டத்தின் போது, தொழில் ஆணையாளர் நாயகமும் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


கேகாலை பெருந்தோட்ட நிறுவனம் உரிய கொடுப்பனவை வழங்க வேண்டும் - தொழில் ஆணையாளர் உறுதி samugammedia   கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற நான்கு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில், தொழில் திணைக்களத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது.இதன்போது, குறித்த பிரச்சினையை மத்தியஸ்த சபையின் ஊடாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், தொழிலாளர்களுக்கு, நிறுவனத்தினால் பணி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய வேதனத்தை வழங்கவும் இணக்கப்பாடு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல, லகிலேண்ட், கம்பஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களின் லாப கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை மத்தியஸ்தர் சபையின் ஊடாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனமேற்குறிப்பிட்ட தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றும் வேலை வழங்காமல் பெருந்தொட்ட நிறுவனத்தினால் வேலை நிறுத்தப்பட்டிருந்த 21 நாட்கள் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேதனம் ஆயிரம் ரூபாயை கணக்கிட்டு 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை தொழில் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய தோட்டங்களுக்கு விஜயம் செய்து உண்மை தன்மையை ஆராய்ந்து உடனடியாக கொடுப்பனவை வழங்குவதற்கு சிபாரிசு செய்வதாக தொழில் ஆணையாளர் உறுதி அளித்தார்மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இணங்க பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் வேலை செய்தால் கட்டாயமாக ஒரு நாள் வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.வர்த்தமானியில் ஒரு தொழிலாளியால் பறிக்கப்படும் தேயிலையின் நிறை தொடர்பில் எதுவித அறிக்கையும் இல்லை என தொழில் ஆணையாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க ரீதியில் நமக்கும் கிடைக்கப்பெற்ற பாரியதொரு வெற்றியாக நான் இதனை காண்கின்றேன் என என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கருத்துரைத்தார்.இதேவேளை, ஆயிரம் ரூபாய் வேதனத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய தேயிலையின் அளவு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் தெரிவித்தார்.இது தொடர்பில், இன்றைய கூட்டத்தின் போது, தொழில் ஆணையாளர் நாயகமும் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement