• May 10 2024

ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பினை ஏற்க முடியாது! மைத்திரி அதிரடி

Chithra / Dec 6th 2022, 11:14 am
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தாம் ஜனாதிபதி பதவியில் இல்லாத காரணத்தினால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட ரீதியில் தன்னிடம் நஷ்டயீடு கோரி வழக்குத் தொடர முடியாது எனவும், அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி பயஸ் முஸ்தபா இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் தங்களுக்கு நஷ்டயீடு வழங்கப்பட வேண்டுமென கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் பிரதிவாதியாக தம்மை குறிப்பிடக்கூடாது என கோரி மைத்திரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீடு குறித்த விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தாக்குதலின் பொறுப்பை தனியாக ஏற்க முடியாது எனவும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பினை ஏற்க முடியாது மைத்திரி அதிரடி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தற்பொழுது தாம் ஜனாதிபதி பதவியில் இல்லாத காரணத்தினால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட ரீதியில் தன்னிடம் நஷ்டயீடு கோரி வழக்குத் தொடர முடியாது எனவும், அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி பயஸ் முஸ்தபா இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் தங்களுக்கு நஷ்டயீடு வழங்கப்பட வேண்டுமென கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கின் பிரதிவாதியாக தம்மை குறிப்பிடக்கூடாது என கோரி மைத்திரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந்த தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த மேன்முறையீடு குறித்த விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தாக்குதலின் பொறுப்பை தனியாக ஏற்க முடியாது எனவும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement