• May 20 2024

புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை...! அவரேதான் தப்பியோடினார்...! வெளியான பரபரப்பு தகவல்..!samugammedia

Sharmi / Oct 20th 2023, 2:23 pm
image

Advertisement

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை. புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சுமித் என்பவரைத் தெரியுமா எனக் கருணாவிடம் கேளுங்கள். அந்த சுமித் நான்தான். கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தை அவர் கொள்ளையடித்தார். அந்தச் சம்பவம் தொடர்பில் புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். மரண பயத்தால் அவர் செல்லவில்லை.

அதையடுத்து கருணாவைக் கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டு அம்மானால் குழுவொன்று அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட இந்தியாவில் இருந்து தப்பி வந்த ஒரேயொரு புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்தக் குழு அனுப்பப்பட்டிருந்தது. இது கருணாவுக்கும்  தெரியவந்தது.

இறுதியில் 20 பேரைக் கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார் எனவும் முன்னாள் புலனாய்வு அதிகாரி தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை. அவரேதான் தப்பியோடினார். வெளியான பரபரப்பு தகவல்.samugammedia விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை. புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்.சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,'சுமித் என்பவரைத் தெரியுமா எனக் கருணாவிடம் கேளுங்கள். அந்த சுமித் நான்தான். கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தை அவர் கொள்ளையடித்தார். அந்தச் சம்பவம் தொடர்பில் புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். மரண பயத்தால் அவர் செல்லவில்லை.அதையடுத்து கருணாவைக் கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டு அம்மானால் குழுவொன்று அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட இந்தியாவில் இருந்து தப்பி வந்த ஒரேயொரு புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்தக் குழு அனுப்பப்பட்டிருந்தது. இது கருணாவுக்கும்  தெரியவந்தது. இறுதியில் 20 பேரைக் கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார் எனவும் முன்னாள் புலனாய்வு அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement