ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரனைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
பலர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் இவர்களை பார்த்தால் பின்னால் மர்மம் உள்ளது .
அம்பாறையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள் நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லீம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம்.
இனவாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.
2019ல் ஈஸ்டர் தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பழியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள் இதனால் முஸ்லீம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள் என்றார்.
முன்னதாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று கிண்ணியாவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வருகை தந்தார்.
இதன் போது கிண்ணியா புஹாரியடி சந்தி பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டத் தாக்குதல் தொடர்பான விசாரனைகளை ஆரம்பித்துள்ளோம்- கிண்ணியாவில் ஜனாதிபதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரனைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்பலர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் இவர்களை பார்த்தால் பின்னால் மர்மம் உள்ளது .அம்பாறையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள் நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லீம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம். இனவாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.2019ல் ஈஸ்டர் தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பழியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள் இதனால் முஸ்லீம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள் என்றார்.முன்னதாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று கிண்ணியாவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வருகை தந்தார்.இதன் போது கிண்ணியா புஹாரியடி சந்தி பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.