• Nov 24 2024

அடுத்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது வரி திருத்தம் செய்யப்படும் என நம்புகிறோம் - ஹர்ஷ டி சில்வா

Tharmini / Oct 29th 2024, 1:05 pm
image

இன்று (29) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன் போது நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற பல பிரச்சனைகளை சுட்டிக் காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.  நாட்டில் தற்பொழுது தேங்காய் மற்றும் அரிசி வரிசையொன்று புதிதாய் ஆரம்பித்துள்ளது.

அரசாங்கம் இதனை கவனிக்கவில்லையா? அரசாங்கத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது வரி திருத்தம் செய்யப்படும் என நம்புகிறோம். ஏனென்றால் மக்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன அவற்றில் அவர்கள் சொன்னதைச் செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

40 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்து தருவதாக கூறினார்கள். இதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் பணத்தை எங்கிருந்து பெறுவார்கள்?

மக்கள் சார்பான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார், அதற்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால் பிப்ரவரி இறுதி வரை வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என நான் நினைக்கவில்லை.

அதேபோல் சிலர் பணம் அச்சிட்டதாக சொல்கிறார்கள், சிலர் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக சொல்வதையும் நான் காண்கிறேன், நான் இவற்றிற்கு பதில் சொல்லமாட்டேன், ஏனென்றால் நான் அதை பகுப்பாய்வு செய்யும் போது பலர் அதனை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு சொல்லலாம் தானே பணம் அச்சிடப்பட்டதா இல்லையா என்று, இல்லை அச்சிட எண்ணி உள்ளதா என்று.

 இப்போது பணவீக்க பயணம் முடிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த நெருக்கடிகள் தீருமா என்று. முதலில் அரிசி, தேங்காய் கேள்விகளை தீர்க்கவும். எரிவாயுவுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு கதையும் உருவாகியுள்ளது.

அரிசிப் பிரச்சினை இன்று ஒரு பிரச்சினையல்ல, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கூட்டுறவு அமைப்பின் மூலம் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும் ஆனால் வெளிநாட்டில் இருந்து அரிசி கொண்டு வரப்பட்டால், மில் உரிமையாளர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆகவே பாரம்பரிய அரிசி ஆலை முறைதான் ஒரே நிவாரணம்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. ஆகவே மக்கள் புரிந்து கொள்வார்கள் எதனை செய்ய வேண்டும் எதனை செய்யக்கூடாது என்று. என மேலும் கருத்து தெரிவித்தார். 

அடுத்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது வரி திருத்தம் செய்யப்படும் என நம்புகிறோம் - ஹர்ஷ டி சில்வா இன்று (29) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற பல பிரச்சனைகளை சுட்டிக் காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.  நாட்டில் தற்பொழுது தேங்காய் மற்றும் அரிசி வரிசையொன்று புதிதாய் ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் இதனை கவனிக்கவில்லையா அரசாங்கத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது வரி திருத்தம் செய்யப்படும் என நம்புகிறோம். ஏனென்றால் மக்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன அவற்றில் அவர்கள் சொன்னதைச் செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.40 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்து தருவதாக கூறினார்கள். இதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் பணத்தை எங்கிருந்து பெறுவார்கள்மக்கள் சார்பான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார், அதற்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால் பிப்ரவரி இறுதி வரை வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என நான் நினைக்கவில்லை. அதேபோல் சிலர் பணம் அச்சிட்டதாக சொல்கிறார்கள், சிலர் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக சொல்வதையும் நான் காண்கிறேன், நான் இவற்றிற்கு பதில் சொல்லமாட்டேன், ஏனென்றால் நான் அதை பகுப்பாய்வு செய்யும் போது பலர் அதனை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு சொல்லலாம் தானே பணம் அச்சிடப்பட்டதா இல்லையா என்று, இல்லை அச்சிட எண்ணி உள்ளதா என்று. இப்போது பணவீக்க பயணம் முடிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த நெருக்கடிகள் தீருமா என்று. முதலில் அரிசி, தேங்காய் கேள்விகளை தீர்க்கவும். எரிவாயுவுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு கதையும் உருவாகியுள்ளது.அரிசிப் பிரச்சினை இன்று ஒரு பிரச்சினையல்ல, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கூட்டுறவு அமைப்பின் மூலம் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும் ஆனால் வெளிநாட்டில் இருந்து அரிசி கொண்டு வரப்பட்டால், மில் உரிமையாளர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆகவே பாரம்பரிய அரிசி ஆலை முறைதான் ஒரே நிவாரணம்.பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. ஆகவே மக்கள் புரிந்து கொள்வார்கள் எதனை செய்ய வேண்டும் எதனை செய்யக்கூடாது என்று. என மேலும் கருத்து தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement