• Apr 05 2025

'எமது நிலம் எமக்கு வேண்டும்' காணிகளை விடுவிக்குமாறு கோரி திருமலையில் போராட்டம்..!

Sharmi / Apr 4th 2025, 4:45 pm
image

திருகோணமலை சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், சம்பூர் சூரிய மின் சக்தி நிலையம், விதுர கடற்படை முகாமுக்காக சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள், 2007 ஆம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்ட காணிக்கான உரித்துடைமையை மக்களுக்கு வழங்குமாறு கோரியும் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'எமது நிலம் எமக்கு வேண்டும், பறிக்காதே பறிக்காதே வாழ்வாதார நிலங்களை பறிக்காதே,சம்பூர் விதுர கடற்படை சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள கையளியுங்கள் உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தி கோசங்கள் எழுப்பப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.








'எமது நிலம் எமக்கு வேண்டும்' காணிகளை விடுவிக்குமாறு கோரி திருமலையில் போராட்டம். திருகோணமலை சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அந்தவகையில், சம்பூர் சூரிய மின் சக்தி நிலையம், விதுர கடற்படை முகாமுக்காக சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள், 2007 ஆம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்ட காணிக்கான உரித்துடைமையை மக்களுக்கு வழங்குமாறு கோரியும் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.'எமது நிலம் எமக்கு வேண்டும், பறிக்காதே பறிக்காதே வாழ்வாதார நிலங்களை பறிக்காதே,சம்பூர் விதுர கடற்படை சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள கையளியுங்கள் உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தி கோசங்கள் எழுப்பப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement