முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினால் நாட்டு மக்களிடம் ஒவ்வொரு ரூபாவாக வாங்கியேனும் நாங்கள் அவருக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் விஜேராமயவிலுள்ள இல்லத்திற்கு சென்று திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தான் மகிந்தவின் நலன் விசாரிக்க வந்ததாகவும் மகிந்த ராஜபக்ச என்பது ஒரு பெயரல்ல ஒரு நாமம் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், நாம் அச்சமடைய தேவையில்லை, குற்றம் இழைத்திருந்தால் தண்டணை வழங்குவதற்கான உரிமையுண்டு.
ஆனால் அரசியல் குரோதங்களுடன் எதிர்தரப்பினரை நடத்திய அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏதோவொரு வகையில் மகிந்த ராஜபக்சவிடம் அரசியல் ரீதியில் பழிவாங்க முயற்சிக்கும் போது அதனை அரசியல் அநாகரிகமாகவே நான் பார்க்கின்றேன் என ரோஹித மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களிடம் ஒவ்வொரு ரூபாவாக வாங்கியேனும் மகிந்தவுக்கு வீடு கட்டிக்கொடுப்போம். ரோஹித சூளுரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டில் இருந்து வெளியில் அனுப்பினால் நாட்டு மக்களிடம் ஒவ்வொரு ரூபாவாக வாங்கியேனும் நாங்கள் அவருக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் விஜேராமயவிலுள்ள இல்லத்திற்கு சென்று திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.மேலும் கருத்து தெரிவித்த அவர், தான் மகிந்தவின் நலன் விசாரிக்க வந்ததாகவும் மகிந்த ராஜபக்ச என்பது ஒரு பெயரல்ல ஒரு நாமம் எனவும் குறிப்பிட்டார்.அத்துடன், நாம் அச்சமடைய தேவையில்லை, குற்றம் இழைத்திருந்தால் தண்டணை வழங்குவதற்கான உரிமையுண்டு. ஆனால் அரசியல் குரோதங்களுடன் எதிர்தரப்பினரை நடத்திய அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏதோவொரு வகையில் மகிந்த ராஜபக்சவிடம் அரசியல் ரீதியில் பழிவாங்க முயற்சிக்கும் போது அதனை அரசியல் அநாகரிகமாகவே நான் பார்க்கின்றேன் என ரோஹித மேலும் குறிப்பிட்டுள்ளார்.