• May 17 2024

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை திறம்பட முன்னெடுப்போம் - ஜீவன் தொண்டமான்! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 5:25 pm
image

Advertisement

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை திறம்பட முன்னெடுப்போம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


அத்தோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்ற ஆதரவிற்கு நான் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.


நானும், எனது அமைச்சும் நீர்வழங்கல் பிரச்சினைகளுக்கான சவால்களை எதிர்கொள்ளவும், நீர் சீர்திருத்தங்களை திறம்பட மற்றும் திறமையாகவும் வழங்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான முறையில் குடிநீர்களை வழங்கவும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளது.

இந்நாட்டின் நீர் வழங்கல் துறையின் திட்டங்கள், கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் அது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.



பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை திறம்பட முன்னெடுப்போம் - ஜீவன் தொண்டமான் samugammedia ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை திறம்பட முன்னெடுப்போம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.அத்தோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்ற ஆதரவிற்கு நான் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.நானும், எனது அமைச்சும் நீர்வழங்கல் பிரச்சினைகளுக்கான சவால்களை எதிர்கொள்ளவும், நீர் சீர்திருத்தங்களை திறம்பட மற்றும் திறமையாகவும் வழங்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான முறையில் குடிநீர்களை வழங்கவும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளது.இந்நாட்டின் நீர் வழங்கல் துறையின் திட்டங்கள், கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் அது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement