• May 10 2024

ரஸ்யாவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்- ஜெலன்ஸ்கி திட்டவட்டம்!

Sharmi / Dec 23rd 2022, 11:18 am
image

Advertisement

” நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்.” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.

போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று சபதமிட்டார்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார்.

இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், “இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது” என புகழாரம் சூட்டினார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரஸ்யாவிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம்- ஜெலன்ஸ்கி திட்டவட்டம் ” நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்.” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று சபதமிட்டார்.உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார்.அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார்.இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், “இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது” என புகழாரம் சூட்டினார்.உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement