• Sep 20 2024

சட்டவிரோதமாக மீன்பிடித்தார்களா? – 20 மீனவர்களை கைது செய்த கடற்படை.! samugammedia

Tamil nila / May 6th 2023, 5:50 pm
image

Advertisement

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 20 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கிளாய் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதி மற்றும் குளச்சல் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சட்டவிரோதமான முறையில் அதிக ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தியும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

8 டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் 19 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பாக  திருகோணமலை, மன்னார், நீர்கொழும்பு ஆகிய பகுதிகள் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மீன்பிடித்தார்களா – 20 மீனவர்களை கைது செய்த கடற்படை. samugammedia கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 20 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொக்கிளாய் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதி மற்றும் குளச்சல் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருந்தது.சட்டவிரோதமான முறையில் அதிக ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தியும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.8 டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் 19 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பாக  திருகோணமலை, மன்னார், நீர்கொழும்பு ஆகிய பகுதிகள் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement