• May 02 2024

தூக்கமின்மை குறித்து ஆய்வாளர்கள் சொல்வது என்ன? SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 5:48 pm
image

Advertisement

இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் இருப்பது உடலுக்கு எந்த நன்மையும் தராது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


தூக்கமின்மையின்போது மூளைக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 134 இளம் ஆராக்கியமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். 


ஆய்வு முடிவின் படி நிம்மதியான தூக்கம் முதுமையை போக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இரவு தூக்கமில்லாமல் இருப்பதால் மூளையானது உயிரியல் வயதை விட பழையதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



முழுமையான தூக்கமின்மை உயிரியல் மூளை வயதை ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, கடுமையான அல்லது நாள்பட்ட பகுதி தூக்கமின்மையால் மூளையின் வயது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றப்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 



உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க மனிதனுக்கு தூக்கம் அவசியம் என்பதை இது காட்டுகிறது. மேலும் தூக்கமும் மூளையும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. தூக்கக் கோளாறு மூளையின் வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


தூக்கமின்மை குறித்து ஆய்வாளர்கள் சொல்வது என்ன SamugamMedia இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் இருப்பது உடலுக்கு எந்த நன்மையும் தராது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தூக்கமின்மையின்போது மூளைக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 134 இளம் ஆராக்கியமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு முடிவின் படி நிம்மதியான தூக்கம் முதுமையை போக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இரவு தூக்கமில்லாமல் இருப்பதால் மூளையானது உயிரியல் வயதை விட பழையதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான தூக்கமின்மை உயிரியல் மூளை வயதை ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, கடுமையான அல்லது நாள்பட்ட பகுதி தூக்கமின்மையால் மூளையின் வயது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றப்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க மனிதனுக்கு தூக்கம் அவசியம் என்பதை இது காட்டுகிறது. மேலும் தூக்கமும் மூளையும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. தூக்கக் கோளாறு மூளையின் வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement