• Mar 29 2024

இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவருக்கு நேர்ந்த கதி! samugammedia

Tamil nila / Jun 10th 2023, 6:37 am
image

Advertisement

தங்கத்தை இப்படி எல்லாம் கடத்தலாமா?' என சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர் கடத்தல்காரர்கள். அந்தளவுக்கு நூதனமான யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். ` வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கொண்டு வருகிறவர்களில் 40 சதவீதம் பேர் தப்பிவிடுகின்றனர். வெகுசிலரே சிக்குகின்றனர்' என்கின்றனர் சுங்கத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.

இந்நிலையில் இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவர் திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

டுபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இவர் விமானத்தில் வந்துள்ளார்.

இந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில் வந்த ஆண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளார்.

அவர் அணிந்து வந்த காலணியை கழட்டி சோதனை மேற்கொண்டதில் காலணியின் நடுவில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவருக்கு நேர்ந்த கதி samugammedia தங்கத்தை இப்படி எல்லாம் கடத்தலாமா' என சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர் கடத்தல்காரர்கள். அந்தளவுக்கு நூதனமான யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். ` வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கொண்டு வருகிறவர்களில் 40 சதவீதம் பேர் தப்பிவிடுகின்றனர். வெகுசிலரே சிக்குகின்றனர்' என்கின்றனர் சுங்கத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.இந்நிலையில் இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்றவர் திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.டுபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இவர் விமானத்தில் வந்துள்ளார்.இந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதில் வந்த ஆண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளார்.அவர் அணிந்து வந்த காலணியை கழட்டி சோதனை மேற்கொண்டதில் காலணியின் நடுவில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement