• Sep 21 2024

பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Chithra / Jan 16th 2023, 10:08 pm
image

Advertisement

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி அனுருத்த குமார தேசிய பாடசாலையில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி உடஹிந்தன்ன பிரதேசத்தில் வசித்து வந்த ஹசித தேவிந்திர என்ற 15 வயது மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மதியம் நாவலப்பிட்டி நகரில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹசிதா, தனது வீட்டிற்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார்.

பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள மண்மேட்டில் அவரது தலை மோதி பலத்த காயமடைந்துள்ளதாக குருந்துவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பேருந்தை நிறுத்தும் முன் முன்பக்கத்தில் இருந்து கீழே இறங்க முயன்ற போது மாணவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், குறித்த விபத்தில் பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவலப்பிட்டி அனுருத்த குமார தேசிய பாடசாலையில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி உடஹிந்தன்ன பிரதேசத்தில் வசித்து வந்த ஹசித தேவிந்திர என்ற 15 வயது மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று (15) மதியம் நாவலப்பிட்டி நகரில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹசிதா, தனது வீட்டிற்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார்.பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள மண்மேட்டில் அவரது தலை மோதி பலத்த காயமடைந்துள்ளதாக குருந்துவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பேருந்தை நிறுத்தும் முன் முன்பக்கத்தில் இருந்து கீழே இறங்க முயன்ற போது மாணவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.மேலும், குறித்த விபத்தில் பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement