• Apr 20 2024

முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி!

Tamil nila / Jan 27th 2023, 8:05 am
image

Advertisement

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.


இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் தெரியவருவது, 


சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது முகநூலில் பல்வேறு கருத்துக்களை (பதிவுகளை) பதிவிட்டதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான மேற்படி கருத்துகளை (பதிவுகளை) தனது முகநூலில் பதிவிட்டமை தெரியவந்துள்ளது.


இதன்படி, அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த சந்தேகநபரின் முகநூல் கணக்கை சோதனை செய்து விரிவான அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் தெரியவருவது, சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது முகநூலில் பல்வேறு கருத்துக்களை (பதிவுகளை) பதிவிட்டதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான மேற்படி கருத்துகளை (பதிவுகளை) தனது முகநூலில் பதிவிட்டமை தெரியவந்துள்ளது.இதன்படி, அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த சந்தேகநபரின் முகநூல் கணக்கை சோதனை செய்து விரிவான அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement