• Sep 25 2026

ஐ.நாவின் பரிந்துரைகளில் இந்த அரசுக்கு என்ன அக்கறை? செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி

dorin / Sep 25th 2026, 2:08 pm
image

ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலுக்கு அமையவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார் என்று தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அப்படியாயின் மனித உரிமைகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானங்களை அரசு ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐ.நா. சபை கூறுவதை ஏற்றுத்தான் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என்றால், மனித உரிமைகள் மற்றும் காணாமல்போனோர் விவகாரங்களில் ஐ.நா. முன்வைத்த தீர்மானங்களையும் பரிந்துரைகளையும் இந்த அரசு ஏன் உடனடியாக நடைமுறைப்படுத்துவதில்லை.?

மற்றைய அனைத்து முக்கியமான தேசிய மற்றும் மனித உரிமை விவகாரங்களையும் ஓரம் தள்ளிவிட்டு, நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு மாத்திரம் அரசு  தற்போது கூடுதல் முன்னுரிமை அளித்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் மட்டும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்திவிட முடியாது. அதனுடன் பொலிஸ் திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் உரிய முறையில் துரிதமாகச் செயற்பட்டாலே அது சாத்தியமாகும்.

வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்றோம். எனினும் வருடக்கணக்கில் வாடிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இந்தத் திருத்தம் எவ்வகையில் உதவும்? 25 முதல் 30 வருடங்களுக்கும் மேலாகச் சிறைகளில் வாடும் அவர்களின் வழக்குகள் இதன் மூலம் துரிதமாக விசாரிக்கப்படுமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதையும், சில நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதையும் வரவேற்கின்றேன். இதற்காகக் குரல்கொடுத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் அரசுக்கும் எனது நன்றிகள்.

இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக நாமும் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். அரசு செய்யும் நல்ல திட்டங்களை வரவேற்கின்றோம். அதேவேளை, நிறைவேற்றப்படாத விவரங்களைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டோம்." - என்றார்.

ஐ.நாவின் பரிந்துரைகளில் இந்த அரசுக்கு என்ன அக்கறை செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலுக்கு அமையவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார் என்று தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அப்படியாயின் மனித உரிமைகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானங்களை அரசு ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,ஐ.நா. சபை கூறுவதை ஏற்றுத்தான் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என்றால், மனித உரிமைகள் மற்றும் காணாமல்போனோர் விவகாரங்களில் ஐ.நா. முன்வைத்த தீர்மானங்களையும் பரிந்துரைகளையும் இந்த அரசு ஏன் உடனடியாக நடைமுறைப்படுத்துவதில்லை.மற்றைய அனைத்து முக்கியமான தேசிய மற்றும் மனித உரிமை விவகாரங்களையும் ஓரம் தள்ளிவிட்டு, நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு மாத்திரம் அரசு  தற்போது கூடுதல் முன்னுரிமை அளித்துள்ளது.நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் மட்டும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்திவிட முடியாது. அதனுடன் பொலிஸ் திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் உரிய முறையில் துரிதமாகச் செயற்பட்டாலே அது சாத்தியமாகும்.வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்றோம். எனினும் வருடக்கணக்கில் வாடிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இந்தத் திருத்தம் எவ்வகையில் உதவும் 25 முதல் 30 வருடங்களுக்கும் மேலாகச் சிறைகளில் வாடும் அவர்களின் வழக்குகள் இதன் மூலம் துரிதமாக விசாரிக்கப்படுமாஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதையும், சில நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதையும் வரவேற்கின்றேன். இதற்காகக் குரல்கொடுத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் அரசுக்கும் எனது நன்றிகள்.இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக நாமும் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். அரசு செய்யும் நல்ல திட்டங்களை வரவேற்கின்றோம். அதேவேளை, நிறைவேற்றப்படாத விவரங்களைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement