• May 19 2024

திருமலையில் - சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட காரணம் என்ன – வெளியான தகவல்.! samugammedia

Tamil nila / Apr 11th 2023, 4:01 pm
image

Advertisement

இலங்கையில் காலூன்றியுள்ள சீன நிறுவனங்கள் செல்வதை சட்டமாக்குகின்ற அரசாங்கம் வடபகுதி சிறு மீன்பிடி தொழிலாளர்களின் குரல் வளைகளை நசுக்குவதாக வடமராட்சி வடக்கு, கடற்றொழிலாளர் சமாசங்களின் முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா இன்று கருத்து ஒன்றை வெளியிட்டுள்தாகவும் அதாவது சிறிய மீன்பிடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச நாடுகளிடம் கோரியதாக நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தாம் சர்வதேச நாடுகளிடம் பிச்சை எடுக்க விரும்பவில்லை என தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்தாலே தமது வாழ்வாதாரத்தை தாமே உருவாக்கி கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நுழைவதை தடுக்குமாறும் வடபகுதிய மீனவர்களை சுதந்திரமாக விடுவதன் மூலம் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள் என்றும் நா.வர்ணகுலசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று திருகோணமலையில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நா.வர்ணகுலசிங்கம் இதற்கு சட்டவிரோத மீன்பிடி முறையே காரணம் என்று குறிப்பிடுகின்றார்.


திருமலையில் - சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட காரணம் என்ன – வெளியான தகவல். samugammedia இலங்கையில் காலூன்றியுள்ள சீன நிறுவனங்கள் செல்வதை சட்டமாக்குகின்ற அரசாங்கம் வடபகுதி சிறு மீன்பிடி தொழிலாளர்களின் குரல் வளைகளை நசுக்குவதாக வடமராட்சி வடக்கு, கடற்றொழிலாளர் சமாசங்களின் முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா இன்று கருத்து ஒன்றை வெளியிட்டுள்தாகவும் அதாவது சிறிய மீன்பிடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச நாடுகளிடம் கோரியதாக நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தாம் சர்வதேச நாடுகளிடம் பிச்சை எடுக்க விரும்பவில்லை என தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்தாலே தமது வாழ்வாதாரத்தை தாமே உருவாக்கி கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நுழைவதை தடுக்குமாறும் வடபகுதிய மீனவர்களை சுதந்திரமாக விடுவதன் மூலம் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள் என்றும் நா.வர்ணகுலசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.இன்று திருகோணமலையில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நா.வர்ணகுலசிங்கம் இதற்கு சட்டவிரோத மீன்பிடி முறையே காரணம் என்று குறிப்பிடுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement