• Sep 21 2024

மூன்று புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி நேரில் விடுத்த கோரிக்கை என்ன?samugammedia

Tamil nila / May 17th 2023, 10:53 pm
image

Advertisement

"மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள்."

இவ்வாறு இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மூன்று புதிய ஆளுநர்களிடமும் நேரில் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் மூன்று புதிய ஆளுநர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஆளுநர்களுக்கு எதிராக மக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் வரக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். ஆளுநர்களை நியமிப்பதும் பதவி நீக்குவதும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை முன்னாள் ஆளுநர்கள் மறந்து செயற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது." - என்றார்.

மூன்று புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி நேரில் விடுத்த கோரிக்கை என்னsamugammedia "மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள்."இவ்வாறு இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மூன்று புதிய ஆளுநர்களிடமும் நேரில் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் மூன்று புதிய ஆளுநர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஆளுநர்களுக்கு எதிராக மக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் வரக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். ஆளுநர்களை நியமிப்பதும் பதவி நீக்குவதும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை முன்னாள் ஆளுநர்கள் மறந்து செயற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement