• May 17 2024

வாட்ஸ்அப்பில் வந்துள்ள சூப்பரான புதிய அப்டேட்டுகள்!

Tamil nila / Dec 12th 2022, 8:42 pm
image

Advertisement

வாட்சப் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.  இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. 


கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி பலவிதமான அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.  மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு இதுபோன்ற பல சிறப்பான அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  நாம் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் சிறப்பான சில அம்சங்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.


1) உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்து கொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது, இதில் நீங்கள் முக்கியமான குறிப்புகள் அல்லது மீடியாவைச் சேமிக்கலாம்.  இந்த சாட் லிஸ்டில் உள்ள முக்கியமான செய்திகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.


2) வாட்ஸ்அப் சாட்லிஸ்ட் ஃபில்டர்கள் இப்போது அதன் வாடிக்கையாளர்களை சாட் லிஸ்டை தேட அனுமதிக்கிறது.  இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் உங்கள் காண்டக்ட்டுகளில் உள்ள மெசேஜ் அல்லது மீடியாவை எளிதில் பார்க்க முடியும்.  இந்த ஃபில்டர் ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்கள் போன்றவற்றின் வாட்ஸ்அப்பில் தேடுதல் பெட்டியின் அருகே கிடைக்கும்.


3) வாட்ஸ்அப் போல் அம்சமானது அதன் வாடிக்கையாளர்களை தனிப்பட்ட அல்லது குழு சாட்களில் கேள்விகளைக் கேட்கவும், அதற்கான பதில்களைப் பெறவும் அனுமதிக்கிறது.  ஒரு வாக்கெடுப்பில் ஒரு கேள்வியின் கீழ் பயனர்கள் 12 விருப்பங்களைச் சேர்க்கலாம்.


4) இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது.  வாட்ஸ்அப் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கி அதனை ஸ்டிக்கர்களாகவும் அனுப்பி கொள்ளலாம் அல்லது ப்ரொபைல் பிக்சராகவும் பயன்படுத்தலாம்.


4) வாட்ஸ்அப் குழுக்களிலுள்ள உறுப்பினர்களை எளிதாகக் கண்டறிய டிஸ்பிளே ப்ரொபைல் பிக்சர் அம்சம் உதவுகிறது.  இப்போது பயனர்கள் குழு உறுப்பினர்களின் படத்தை பார்த்து குழுவில் இணைக்க முடியும்.


5) லிங்குகளை உருவாக்கி அதன் மூலமாக மற்றவர்களை உங்களது அழைப்பில் இணைத்து கொள்ள கூடிய அம்சத்தை வாட்ஸ் அப் வழங்குகிறது.


6) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒருவரது ஸ்டோரிக்கு எப்படி எமோஜிக்கள் மூலமாக பதிலளிப்போமோ அதேபோல வாட்ஸ்அப்பிலும் இனி ஸ்டேட்டஸ்களுக்கு மெசேஜ் எதுவும் டைப் செய்யாமல் உடனடியாக எமோஜிக்கள் மூலமாக ரிப்ளை செய்ய முடியும்.


7) வாட்ஸ்அப் குழுவிலிருந்து யாரவது வெளியேறினால் குழவின்  நிர்வாகிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்படும் மற்றும் குழுவில் உறுப்பினர்களின் மெசேஜ்கள் சரியில்லையென்றால் அதனை அட்மின் நீக்கலாம்.  வாட்ஸ்அப்பின் குழு உறுப்பினர்களின் வரம்பு 512லிருந்து 1024 ஆக அதிகரிக்கப்போகிறது.


8) வாட்ஸ்அப் இப்போது 'டெலிட் ஃபார் மீ' மெசேஜை மீட்டெடுக்க உதவுகிறது, இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்டில் நீங்கள் தவறுதலாக நீக்கிய செய்தியை நீங்களே சரிபார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வந்துள்ள சூப்பரான புதிய அப்டேட்டுகள் வாட்சப் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.  இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி பலவிதமான அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.  மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு இதுபோன்ற பல சிறப்பான அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  நாம் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் சிறப்பான சில அம்சங்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.1) உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்து கொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது, இதில் நீங்கள் முக்கியமான குறிப்புகள் அல்லது மீடியாவைச் சேமிக்கலாம்.  இந்த சாட் லிஸ்டில் உள்ள முக்கியமான செய்திகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.2) வாட்ஸ்அப் சாட்லிஸ்ட் ஃபில்டர்கள் இப்போது அதன் வாடிக்கையாளர்களை சாட் லிஸ்டை தேட அனுமதிக்கிறது.  இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் உங்கள் காண்டக்ட்டுகளில் உள்ள மெசேஜ் அல்லது மீடியாவை எளிதில் பார்க்க முடியும்.  இந்த ஃபில்டர் ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்கள் போன்றவற்றின் வாட்ஸ்அப்பில் தேடுதல் பெட்டியின் அருகே கிடைக்கும்.3) வாட்ஸ்அப் போல் அம்சமானது அதன் வாடிக்கையாளர்களை தனிப்பட்ட அல்லது குழு சாட்களில் கேள்விகளைக் கேட்கவும், அதற்கான பதில்களைப் பெறவும் அனுமதிக்கிறது.  ஒரு வாக்கெடுப்பில் ஒரு கேள்வியின் கீழ் பயனர்கள் 12 விருப்பங்களைச் சேர்க்கலாம்.4) இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது.  வாட்ஸ்அப் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கி அதனை ஸ்டிக்கர்களாகவும் அனுப்பி கொள்ளலாம் அல்லது ப்ரொபைல் பிக்சராகவும் பயன்படுத்தலாம்.4) வாட்ஸ்அப் குழுக்களிலுள்ள உறுப்பினர்களை எளிதாகக் கண்டறிய டிஸ்பிளே ப்ரொபைல் பிக்சர் அம்சம் உதவுகிறது.  இப்போது பயனர்கள் குழு உறுப்பினர்களின் படத்தை பார்த்து குழுவில் இணைக்க முடியும்.5) லிங்குகளை உருவாக்கி அதன் மூலமாக மற்றவர்களை உங்களது அழைப்பில் இணைத்து கொள்ள கூடிய அம்சத்தை வாட்ஸ் அப் வழங்குகிறது.6) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒருவரது ஸ்டோரிக்கு எப்படி எமோஜிக்கள் மூலமாக பதிலளிப்போமோ அதேபோல வாட்ஸ்அப்பிலும் இனி ஸ்டேட்டஸ்களுக்கு மெசேஜ் எதுவும் டைப் செய்யாமல் உடனடியாக எமோஜிக்கள் மூலமாக ரிப்ளை செய்ய முடியும்.7) வாட்ஸ்அப் குழுவிலிருந்து யாரவது வெளியேறினால் குழவின்  நிர்வாகிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்படும் மற்றும் குழுவில் உறுப்பினர்களின் மெசேஜ்கள் சரியில்லையென்றால் அதனை அட்மின் நீக்கலாம்.  வாட்ஸ்அப்பின் குழு உறுப்பினர்களின் வரம்பு 512லிருந்து 1024 ஆக அதிகரிக்கப்போகிறது.8) வாட்ஸ்அப் இப்போது 'டெலிட் ஃபார் மீ' மெசேஜை மீட்டெடுக்க உதவுகிறது, இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்டில் நீங்கள் தவறுதலாக நீக்கிய செய்தியை நீங்களே சரிபார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement