• Apr 28 2024

2023 புத்தாண்டு பிறக்கையில் துன்பங்கள் நீங்க... இந்த தீபத்தை மட்டும் மறக்காமல் ஏற்றி விடுங்கள்!

Tamil nila / Dec 31st 2022, 2:55 pm
image

Advertisement

ஒவ்வொரு வருடமும் புது வருடம் பிறக்கும் நாளன்று இரவு வீட்டில் தீபம் ஏற்றி புத்தாண்டை வரவேற்பதும் கடவுளை வணங்குவதும் நமக்கு நல்லதையே தரும்.


அந்தவகையில், 2023 ஆம் வருடத்தில் நாம் பட்ட துன்பங்கள் எல்லாம் நீங்கி, வரும் வருடத்தில் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை எல்லோரும் வாழ வேண்டும் என வேண்டி தீபம் ஏற்றுவோம்.


அவ்வாறு, நாம் ஏற்றும் தீபத்தை கீழ் வரும் முறையில் ஏற்றினால், கட்டாயம் இந்த வருடம் நீங்கள் அனுபவித்த துன்பம் நீங்கி, புது வருடம் நல்லதாக அமையும் .


தீபத்தை ஏற்றுவதே நம் மனதில் இருக்கும் இருள், மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் கவலை என்னும் இருளையும் நீக்கி, இந்த தீபத்தின் ஒளியைப் போல நம் வாழ்வும் பிரகாசமாக சுடர் விடவேண்டும் என்பதற்காகத்தான்.


தீபத்தை ஏற்ற நமக்கு தேவையானது ஒரு அகல் விளக்கு, இதற்கு நாம் எப்போதும் பயன்படுத்தும் ஒரு திரி போட்டு ஏற்றும் சிறிய அகலை பயன்படுத்த முடியாது. இந்த விளக்கில் எட்டு திரி தனி தனியாக போட்டு ஏற்ற வேண்டும்.


அதற்கு ஏற்றார் போல் பெரிய அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு புது அகல் தான் பயன்படுத்த வேண்டும். அத்துடன் எட்டு பஞ்சு திரி, சுத்தமான பசு நெய் (பசு நெய் கிடைக்காதவர்கள் நல்லெண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம் அத்துடன் வாசனை மிக்க மலர்கள்.


நள்ளிரவு 12 மணி முன்பாகவே இந்த விளக்கை சுத்தமாக துடைத்து மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து இதில் நெய் ஊற்றி 8 திரி போட்டு விளக்கின் மீது பூ வைத்து பூஜை அறையில் தயாராக வைத்து விடுங்கள்.


சரியாக நள்ளிரவு 12 மணி ஆனவுடன் இந்த விளக்கை ஏற்றி விளக்கின் முன் சிறிது நேரம் அமர்ந்து இந்த வருடத்தில் நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி வரும் வருடத்தில் நல்லபடியாகவும், செல்வ செழிப்புடனும், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை வேண்டி கொள்ளுங்கள்.



அதன் பிறகு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள். இந்த வருட பிறப்பு சனிக்கிழமை இரவு வருகிறது என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம் என கூறப்படுகின்றது.


2023 புத்தாண்டு பிறக்கையில் துன்பங்கள் நீங்க. இந்த தீபத்தை மட்டும் மறக்காமல் ஏற்றி விடுங்கள் ஒவ்வொரு வருடமும் புது வருடம் பிறக்கும் நாளன்று இரவு வீட்டில் தீபம் ஏற்றி புத்தாண்டை வரவேற்பதும் கடவுளை வணங்குவதும் நமக்கு நல்லதையே தரும்.அந்தவகையில், 2023 ஆம் வருடத்தில் நாம் பட்ட துன்பங்கள் எல்லாம் நீங்கி, வரும் வருடத்தில் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை எல்லோரும் வாழ வேண்டும் என வேண்டி தீபம் ஏற்றுவோம்.அவ்வாறு, நாம் ஏற்றும் தீபத்தை கீழ் வரும் முறையில் ஏற்றினால், கட்டாயம் இந்த வருடம் நீங்கள் அனுபவித்த துன்பம் நீங்கி, புது வருடம் நல்லதாக அமையும் .தீபத்தை ஏற்றுவதே நம் மனதில் இருக்கும் இருள், மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் கவலை என்னும் இருளையும் நீக்கி, இந்த தீபத்தின் ஒளியைப் போல நம் வாழ்வும் பிரகாசமாக சுடர் விடவேண்டும் என்பதற்காகத்தான்.தீபத்தை ஏற்ற நமக்கு தேவையானது ஒரு அகல் விளக்கு, இதற்கு நாம் எப்போதும் பயன்படுத்தும் ஒரு திரி போட்டு ஏற்றும் சிறிய அகலை பயன்படுத்த முடியாது. இந்த விளக்கில் எட்டு திரி தனி தனியாக போட்டு ஏற்ற வேண்டும்.அதற்கு ஏற்றார் போல் பெரிய அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு புது அகல் தான் பயன்படுத்த வேண்டும். அத்துடன் எட்டு பஞ்சு திரி, சுத்தமான பசு நெய் (பசு நெய் கிடைக்காதவர்கள் நல்லெண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம் அத்துடன் வாசனை மிக்க மலர்கள்.நள்ளிரவு 12 மணி முன்பாகவே இந்த விளக்கை சுத்தமாக துடைத்து மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து இதில் நெய் ஊற்றி 8 திரி போட்டு விளக்கின் மீது பூ வைத்து பூஜை அறையில் தயாராக வைத்து விடுங்கள்.சரியாக நள்ளிரவு 12 மணி ஆனவுடன் இந்த விளக்கை ஏற்றி விளக்கின் முன் சிறிது நேரம் அமர்ந்து இந்த வருடத்தில் நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி வரும் வருடத்தில் நல்லபடியாகவும், செல்வ செழிப்புடனும், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை வேண்டி கொள்ளுங்கள்.அதன் பிறகு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள். இந்த வருட பிறப்பு சனிக்கிழமை இரவு வருகிறது என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement