• Sep 19 2024

இலங்கையின் முதல் அணுமின் நிலையம் எப்போது நிர்மாணிக்கப்படும்..? வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / May 16th 2023, 6:00 pm
image

Advertisement

இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணுசக்ன் தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஒட்டு வேலை (Welding) மற்றும் தொழிநுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் இந்தக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுக்கு பாரியளவு கேள்வி உள்ளதாகவும், இலங்கையில் இத்துறையில் முறையான அங்கீகாரத்துடன் பயிற்சிபெற்ற நிபுணர்களை உருவாக்குவதற்கு உரிய பொறிமுறையொன்றின் அவசியம் தொடர்பில் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் முதல் அணுமின் நிலையம் எப்போது நிர்மாணிக்கப்படும். வெளியான அறிவிப்பு samugammedia இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை அறிவித்துள்ளது.இலங்கை அணுசக்ன் தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, ஒட்டு வேலை (Welding) மற்றும் தொழிநுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் இந்தக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுக்கு பாரியளவு கேள்வி உள்ளதாகவும், இலங்கையில் இத்துறையில் முறையான அங்கீகாரத்துடன் பயிற்சிபெற்ற நிபுணர்களை உருவாக்குவதற்கு உரிய பொறிமுறையொன்றின் அவசியம் தொடர்பில் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

Advertisement

Advertisement

Advertisement