• Dec 18 2024

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நான் ஒதுக்கிய நிதி எங்கே? - அனுரவிடம் ரணில் கேள்வி

Chithra / Oct 24th 2024, 8:08 am
image



அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் திட்டமிட்டிருந்தோம். 

சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசமைப்பின் 43ஆவது சரத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நாம் தீர்மானம் எடுத்திருந்தோம். அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானித்திருந்தோம்.

சம்பள உயர்வுக்கான கோரிக்கை நியாயமானது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஊதியத்தின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

மக்கள் மிகவும் நெருக்கடியிலேயே வாழ்ந்தனர்.  அவர்கள் கடனில் மூழ்க வேண்டியிருந்தது. சிலர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது. 

நான் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் நிவாரணம் கொடுக்கும் நிலை இருக்கவில்லை. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவால் உயர்த்தச் சொன்னார்கள்.

2024இல் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வழங்கினோம். ஆனால், அந்தப் பத்தாயிரம் ரூபா போதாது.  சில குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

எனது நண்பர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்தார் என நான் நினைக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எமது அரசு எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது.

அமைச்சு என்பது ஓர் அமைப்பு. அமைப்புக்குச் சட்டங்கள் இல்லை. அரசமைப்பின் 52 ஆவது பிரிவின் கீழ் அமைச்சரின் தலைமையில் அமைச்சு உள்ளது. - என்றார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நான் ஒதுக்கிய நிதி எங்கே - அனுரவிடம் ரணில் கேள்வி அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் திட்டமிட்டிருந்தோம். சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அரசமைப்பின் 43ஆவது சரத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நாம் தீர்மானம் எடுத்திருந்தோம். அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்கத் தீர்மானித்திருந்தோம்.சம்பள உயர்வுக்கான கோரிக்கை நியாயமானது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஊதியத்தின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.மக்கள் மிகவும் நெருக்கடியிலேயே வாழ்ந்தனர்.  அவர்கள் கடனில் மூழ்க வேண்டியிருந்தது. சிலர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது. நான் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் நிவாரணம் கொடுக்கும் நிலை இருக்கவில்லை. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவால் உயர்த்தச் சொன்னார்கள்.2024இல் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வழங்கினோம். ஆனால், அந்தப் பத்தாயிரம் ரூபா போதாது.  சில குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர்.எனது நண்பர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்தார் என நான் நினைக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எமது அரசு எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது.அமைச்சு என்பது ஓர் அமைப்பு. அமைப்புக்குச் சட்டங்கள் இல்லை. அரசமைப்பின் 52 ஆவது பிரிவின் கீழ் அமைச்சரின் தலைமையில் அமைச்சு உள்ளது. - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement