• May 03 2024

செங்கோலை வளைக்கலாம் என்போருக்குச் சாட்டையடி...! முல்லை நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தன்...!samugammedia

Sharmi / Sep 29th 2023, 8:16 am
image

Advertisement

போர்வெற்றி வீறாப்பில், ஆயுதக் குவிப்பின் எக்காளத்தில் நீதியை உடைக்கலாம். செங்கோலை வளைக்கலாம் என்போருக்குச் சாட்டையடி கொடுத்திருக்கிறார் நீதிபதி சரவணராஜா என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. மாவட்ட நீதிபதி சரவணராஜா மேல் மகன். பொருளை ஒறுத்தார். பதவியை ஒறுத்தார். வசதிகளை ஒறுத்தார். வாழும் சூழலை ஒறுத்தார். கொள்கை வழி நிற்கிறார்.

தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லி யாரைக் கேட்கிறாய்?, அநீதிக்குத் தலை வணங்குவேன் என நினைத்தாயோ?. அரசியல் அழுத்தங்களுக்காகச் சட்டத்தைப் புரட்டுவேன் என நினைத்தாயோ? அடிமை வாழ்க்கை என்றாலும் ஆணித்தரமான கொள்கை வாழ்க்கை வாழ்கின்றே னடா. போ.. போ.. நீயும் நீ தந்த பதவியும். நீ தந்த வாழ்க்கையும். உதறித் தள்ளிய ஆண்மகன் நீதிபதி சரவணராஜா. மனிதத்தின் மறுபிம்பம் நீதிபதி சரவணராஜா.

போர்த்துக்கேயர் ஆட்சியில் பசுவைக் கொன்று இறைச் சியைத் தரேன். கிறித்தவனாக மதம் மாறேன் என்ற ஆண் மகன் அன்றைய ஞானப்பிரகாசரின் வழிவந்தவர் இன்றைய நீதிபதி சரவணராஜா. அன்று கத்தோலிக்கரிடம் அடிமையாக இருந்தோம். இன்று புத்தர்களிடம் அடிமையாக இருக்கிறோம்.

நீறுபூத்த நெருப்பாக, ஊதினால் தீயாகும் தணலாக, விடுதலை வேட்கை உள்ளத்தில் கரந்துறைவதன் அடையாளங்கள் அன்றைய ஞானப்பிரகாசரும். இன்றைய சரவணராஜரும். ஞானப்பிரகாசர்களையும் சரவணரா ஜாக்களையும் இடையீடின்றி உருவாக்கும் இலங்கைச் சைவத்தமிழ்ச் சமூகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கோலை வளைக்கலாம் என்போருக்குச் சாட்டையடி. முல்லை நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தன்.samugammedia போர்வெற்றி வீறாப்பில், ஆயுதக் குவிப்பின் எக்காளத்தில் நீதியை உடைக்கலாம். செங்கோலை வளைக்கலாம் என்போருக்குச் சாட்டையடி கொடுத்திருக்கிறார் நீதிபதி சரவணராஜா என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. மாவட்ட நீதிபதி சரவணராஜா மேல் மகன். பொருளை ஒறுத்தார். பதவியை ஒறுத்தார். வசதிகளை ஒறுத்தார். வாழும் சூழலை ஒறுத்தார். கொள்கை வழி நிற்கிறார்.தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லி யாரைக் கேட்கிறாய், அநீதிக்குத் தலை வணங்குவேன் என நினைத்தாயோ. அரசியல் அழுத்தங்களுக்காகச் சட்டத்தைப் புரட்டுவேன் என நினைத்தாயோ அடிமை வாழ்க்கை என்றாலும் ஆணித்தரமான கொள்கை வாழ்க்கை வாழ்கின்றே னடா. போ. போ. நீயும் நீ தந்த பதவியும். நீ தந்த வாழ்க்கையும். உதறித் தள்ளிய ஆண்மகன் நீதிபதி சரவணராஜா. மனிதத்தின் மறுபிம்பம் நீதிபதி சரவணராஜா.போர்த்துக்கேயர் ஆட்சியில் பசுவைக் கொன்று இறைச் சியைத் தரேன். கிறித்தவனாக மதம் மாறேன் என்ற ஆண் மகன் அன்றைய ஞானப்பிரகாசரின் வழிவந்தவர் இன்றைய நீதிபதி சரவணராஜா. அன்று கத்தோலிக்கரிடம் அடிமையாக இருந்தோம். இன்று புத்தர்களிடம் அடிமையாக இருக்கிறோம்.நீறுபூத்த நெருப்பாக, ஊதினால் தீயாகும் தணலாக, விடுதலை வேட்கை உள்ளத்தில் கரந்துறைவதன் அடையாளங்கள் அன்றைய ஞானப்பிரகாசரும். இன்றைய சரவணராஜரும். ஞானப்பிரகாசர்களையும் சரவணரா ஜாக்களையும் இடையீடின்றி உருவாக்கும் இலங்கைச் சைவத்தமிழ்ச் சமூகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement