• Nov 22 2024

மலேரியா இல்லாத தேசமாக அங்கீகாரம் பெற்ற எகிப்து- உலக சுகாதார மையம் அறிவிப்பு!

Tamil nila / Oct 25th 2024, 6:36 pm
image

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. எகிப்து பழமையான நாகரிகத்தை கொண்டுள்ள நாடான போதிலும், மலேரியா நோய்க்கும் அங்கு நீண்ட வரலாறு உள்ளது.

இனி எகிப்தில் மலேரியா ஒரு கடந்த கால வரலாறாக மாத்திரமே இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எகிப்துடன் சேர்த்து உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அத்தாட்சிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழப்பதுடன் அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேரியா இல்லாத தேசமாக அங்கீகாரம் பெற்ற எகிப்து- உலக சுகாதார மையம் அறிவிப்பு மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. எகிப்து பழமையான நாகரிகத்தை கொண்டுள்ள நாடான போதிலும், மலேரியா நோய்க்கும் அங்கு நீண்ட வரலாறு உள்ளது.இனி எகிப்தில் மலேரியா ஒரு கடந்த கால வரலாறாக மாத்திரமே இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எகிப்துடன் சேர்த்து உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அத்தாட்சிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.உலகில் ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழப்பதுடன் அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement