• May 17 2024

தமிழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார்? - சமஸ்டி வேண்டும் என்று ஊளையிடுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும்! இனவாதி வீரசேகர

Chithra / Feb 7th 2023, 11:08 am
image

Advertisement

தனிநாட்டைக் கோரும் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த படையினரை அவமதிக்கும் வகையிலும் கோசங்களை எழுப்பியவாறு வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் புறப்படும் தமிழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார்? என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு இருக்கும் தற்போதைய நிலையில் இவ்வாறான பேரணி ஒன்று தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு மௌனம் காத்தது ஏன்? என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? என்றும் தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை என்றும் இனவாதியான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக்கொண்ட நாடு என்றும் எனவே, இந்த நாட்டை எந்தத் சந்தர்ப்பத்திலும் பிளவுபடுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்டி வேண்டும் என்று ஊளையிடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார் - சமஸ்டி வேண்டும் என்று ஊளையிடுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் இனவாதி வீரசேகர தனிநாட்டைக் கோரும் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த படையினரை அவமதிக்கும் வகையிலும் கோசங்களை எழுப்பியவாறு வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் புறப்படும் தமிழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.நாடு இருக்கும் தற்போதைய நிலையில் இவ்வாறான பேரணி ஒன்று தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு மௌனம் காத்தது ஏன் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது என்றும் தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை என்றும் இனவாதியான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக்கொண்ட நாடு என்றும் எனவே, இந்த நாட்டை எந்தத் சந்தர்ப்பத்திலும் பிளவுபடுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.சமஸ்டி வேண்டும் என்று ஊளையிடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement