• Apr 27 2024

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேற உதவியது யார்..? – சஜித் கேள்வி samugammedia

Chithra / May 23rd 2023, 12:24 pm
image

Advertisement

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் யாருடைய ஆதரவுடன் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தூய பௌத்தத்தை உறுதியாக நம்பி, பௌத்தத்தை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்துகின்ற ஒரு நடைமுறை பௌத்தன் என்ற முறையில், இந்த போதகரின் தீய கூற்றுக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவை முன்னரைவிடவும் எதிர்காலத்தில் வலுவாக கட்டியெழுப்பப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். 

இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளால் மத மோதல்கள் மற்றும் வெறுப்பு உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த நாடு நீண்ட காலமாக தூய பௌத்தத்தால் போஷிக்கப்பட்டு வருகிறது, பௌத்தம் ஒரு உலகளாவிய மதம். இது எந்த மதத்திற்கோ தேசத்திற்கோ சொந்தமில்லாத ஒரு உலகளாவிய மதம். 

இதேவேளை தன்னிச்சையாக கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதும் அவர் யாருடைய ஆதரவுடன் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை வெளிக்கொணர வேண்டும். 

சமூகத்தில் நடக்கும் இத்தகைய கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முடக்கும் வகையில், முழு நாடும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேற உதவியது யார். – சஜித் கேள்வி samugammedia போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் யாருடைய ஆதரவுடன் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.தூய பௌத்தத்தை உறுதியாக நம்பி, பௌத்தத்தை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்துகின்ற ஒரு நடைமுறை பௌத்தன் என்ற முறையில், இந்த போதகரின் தீய கூற்றுக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவை முன்னரைவிடவும் எதிர்காலத்தில் வலுவாக கட்டியெழுப்பப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளால் மத மோதல்கள் மற்றும் வெறுப்பு உருவாகும் அபாயம் உள்ளது.இந்த நாடு நீண்ட காலமாக தூய பௌத்தத்தால் போஷிக்கப்பட்டு வருகிறது, பௌத்தம் ஒரு உலகளாவிய மதம். இது எந்த மதத்திற்கோ தேசத்திற்கோ சொந்தமில்லாத ஒரு உலகளாவிய மதம். இதேவேளை தன்னிச்சையாக கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதும் அவர் யாருடைய ஆதரவுடன் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை வெளிக்கொணர வேண்டும். சமூகத்தில் நடக்கும் இத்தகைய கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முடக்கும் வகையில், முழு நாடும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement