• Apr 30 2024

ஜனாதிபதி வேட்பாளர் யார்? தொடரும் இழுபறி நிலை....! மொட்டு கட்சி எடுத்த தீர்மானம்...!

Sharmi / Apr 17th 2024, 10:47 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பொதுஜன பெரமுன பரந்த கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பல முனைப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துவரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் வெற்றி தொடர்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும்பரந்த கூட்டணி அமைக்கத் தீர்மானித்துள்ளன.

அதன் முதற்கட்டமாக இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் கொள்கையளவிலான உடன்பாடுகளை எட்டுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இரு கட்சிகளுக்குமிடையே தேசிய கொள்கை இணக்கப்பாடு எட்டப் படாமையால், விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பேச்சுகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அவ்வாறு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி வேட்பாளர் யார் தொடரும் இழுபறி நிலை. மொட்டு கட்சி எடுத்த தீர்மானம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பொதுஜன பெரமுன பரந்த கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பல முனைப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துவரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் வெற்றி தொடர்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும்பரந்த கூட்டணி அமைக்கத் தீர்மானித்துள்ளன.அதன் முதற்கட்டமாக இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் கொள்கையளவிலான உடன்பாடுகளை எட்டுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.அத்துடன் இரு கட்சிகளுக்குமிடையே தேசிய கொள்கை இணக்கப்பாடு எட்டப் படாமையால், விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பேச்சுகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அவ்வாறு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement