எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் பொது மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் இந்த கலந்துரையாடல் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் இன்றையதினம்(10) வவுனியா, மன்னார், புத்தளம் பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும். மக்களுடன் ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடல். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் பொது மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் இந்த கலந்துரையாடல் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அந்தவகையில் இன்றையதினம்(10) வவுனியா, மன்னார், புத்தளம் பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.