• Apr 28 2024

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு ஏன் வந்தார்கள்? வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Feb 23rd 2023, 9:43 am
image

Advertisement

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்களென தனக்குத் தெரியாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் விக்டோரியா நூலனண்ட்டின் வருகையைத் தொடர்ந்து பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். 

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேசினார்கள் என்று வெளிவாவகார அமைச்சருக்குத் தெரியுமா? அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும்.

ஆகவே அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எவ் விடயம் தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை வெளிவிவகாரத் துறை அமைச்சர் அறிவரா? அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த வெளி விவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள், எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்தார்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு ஏன் வந்தார்கள் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்களென தனக்குத் தெரியாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் விக்டோரியா நூலனண்ட்டின் வருகையைத் தொடர்ந்து பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.இவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேசினார்கள் என்று வெளிவாவகார அமைச்சருக்குத் தெரியுமா அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும்.ஆகவே அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எவ் விடயம் தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை வெளிவிவகாரத் துறை அமைச்சர் அறிவரா அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.இதற்குப் பதிலளித்த வெளி விவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள், எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement