• Sep 19 2024

பெண்கள் பல்கலைக்கழகம் செல்ல தலீபான்கள் தடை விதித்தது ஏன்?

Tamil nila / Dec 23rd 2022, 8:35 pm
image

Advertisement

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான் அமைப்பினர் அங்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.


இதன்படி, அண்மையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கவும் தலீபான்கள் தடை விதித்தனர்.


இந்த விடயமானது, சர்வதேச அளவில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


இந்த நிலையில், இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா மொஹம்மட் நதீம் விளக்கமளித்துள்ளார்.


உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும், ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், பொறியியல் உள்ளிட்ட சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் ஆப்கானிய கலாசாரத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.


மேலும், ஆண்களின் துணையின்றி சில பெண்கள் தனியாக பயணம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண் கல்வியை கட்டுப்படுத்தும் அண்மைய கடும் கொள்கை இதுவாக அமைந்துள்ளது

பெண்கள் பல்கலைக்கழகம் செல்ல தலீபான்கள் தடை விதித்தது ஏன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான் அமைப்பினர் அங்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.இதன்படி, அண்மையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கவும் தலீபான்கள் தடை விதித்தனர்.இந்த விடயமானது, சர்வதேச அளவில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில், இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா மொஹம்மட் நதீம் விளக்கமளித்துள்ளார்.உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும், ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், பொறியியல் உள்ளிட்ட சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் ஆப்கானிய கலாசாரத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.மேலும், ஆண்களின் துணையின்றி சில பெண்கள் தனியாக பயணம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண் கல்வியை கட்டுப்படுத்தும் அண்மைய கடும் கொள்கை இதுவாக அமைந்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement