• Nov 24 2024

பாராளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார்?

Sharmi / Sep 27th 2024, 9:20 am
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்  தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்தத்  தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்று அறியமுடிகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரன், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாராளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்  தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்தத்  தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்று அறியமுடிகின்றது.கடந்த 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரன், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement