• Nov 23 2024

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ..!

Chithra / Jul 25th 2024, 11:17 am
image


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே. 

உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அம்மாற்றத்தை  உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும் என்றும் நீதியமைச்சர் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே. உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அம்மாற்றத்தை  உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும் என்றும் நீதியமைச்சர் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement