• Nov 28 2024

விக்கிலீக்ஸ்சின் நிறுவனர் விடுதலையானார்...!

Anaath / Jun 25th 2024, 10:52 am
image

விக்கிலீக்ஸ்சின்  நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே  இன்று இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன்  அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு இலண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விக்கிலீக்ஸ்சின் நிறுவனர் விடுதலையானார். விக்கிலீக்ஸ்சின்  நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே  இன்று இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன்  அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு இலண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.இந்நிலையில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement